பாடகி சின்மயி குடும்பத்தாரிடம் நூதன மோசடி... லிங்கை கிளிக் செய்ததும் காணாமல் போன பணம்

Update: 2023-08-12 13:52 GMT

பிரபல பின்னணி பாடகி சின்மயி குடும்பத்தாரிடம் இருந்து நூதன முறையில் பணமோசடி நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பாடகி சின்மயி, தனது குடும்பத்தில் உள்ள முதியோரிடம் போலியான பில் மூலம் மின்சார கட்டணம் செலுத்தக் கோரி மோசடி நடைபெற்றதாகவும், OTP எண் பகிரப்படாமலேயே இந்த மோசடி நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், செல்போனுக்கு வந்த லிங்கை கிளிக் செய்த உடன் வங்கிக் கணக்கில் இருந்த பணம் காணாமல்போனதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்