கரு முட்டையை உறைய வைத்த பிரபல நடிகை - இதுதான் காரணமா..?

Update: 2024-05-01 03:39 GMT

பட்டாசு, நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை மெஹ்ரீன் பிர்சாடா தன் கரு முட்டையை உறைய வைத்துள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். திருமணம், குழந்தைகள் பற்றிய எதிர்காலத்தை இன்னும் தீர்மானிக்காததன் காரணமாக, எதிர்காலத்தில் இது தொடர்பான பிரச்சினைகள் வராமல் இருக்க தன் கருமுட்டைகளை உறைய வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மனரீதியாகத் தன்னைத் தயார் படுத்த 2 ஆண்டுகள் தேவைப்பட்டதாகவும், அனைத்து பெண்களும் இதைச் செய்ய வேண்டும் என்றும் மெஹ்ரீன் பிர்சாடா கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்