நடிகை ஆண்ட்ரியா படத்திற்கு தடை.. கடைசி நேரத்தில் ஷாக் கொடுத்த ஹைகோர்ட்

Update: 2024-03-29 05:53 GMT

நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள "கா - தி ஃபாரஸ்ட்"படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஷாலோம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள "கா - தி ஃபாரஸ்ட்" படம் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என "EIGHT Entertainment" என்ற நிறுவனத்தின் உரிமையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி தயாரிப்பாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 12 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்....

Tags:    

மேலும் செய்திகள்