புதிய தோற்றத்தில் நடிகர் சல்மான்கான்

இந்தி பட உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான்

Update: 2019-04-16 04:00 GMT
சல்மான்கான் 53 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்களும் வருகின்றன. இந்த நிலையில் சல்கான்கான் இந்தியில் நடித்து வரும் 'பாரத்' படம், அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தி இருந்தது.இதில் கத்ரினா கைப், திஷா பதானி, தபு ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன.இந்த நிலையில் படத்தில் சல்மான்கான் நடிக்கும் வித்தியாசமான தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.படம் ஜூன் மாதம் 5-ந் தேதி திரைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளனர்.சல்மான்கான் தோற்றம் சமூக வலை தளத்தில் பரவி வருகிறது
Tags:    

மேலும் செய்திகள்