அவிழும் 30 லட்சம் ஆண்டு மர்மம்... புதிய மனித இனம் கண்டுபிடிப்பு
அவிழும் 30 லட்சம் ஆண்டு மர்மம் புதிய மனித இனம் கண்டுபிடிப்பு அறிவியல் உலகையே வியக்க வைத்த `பல்’....
ஒரு ஊர்ல..2 வகையான மனிதர்களோட மூதாதையர்கள் வாழ்ந்துட்டு வந்தாங்களாம்...2 பேரையுமே மனிதர்-ன்ற சொல்லுக்குள்ள அடக்கலாம்...ஆனா வகை 2...ஒரே மண்ணுல தான் ரெண்டுபேரும் நடந்துருக்காங்க...ஒரே மாதிரிதான் விலங்குகள வேட்டையாடிருப்பாங்க...ஒரே குகைக்குள்ளதான் தூங்கிருப்பாங்க..நீயும் நானும் ஒன்னு இல்லங்குறத தெரியாமலேயே ஒரே பாதைலதான் நடந்துருப்பாங்க...ஒரு வகை மனிதர்கள நமக்குத் தெரியும்...ஆனா அந்த இன்னொரு வகை யாருன்னே யாருக்கும் தெரியல..ஒருவேள அறிவியல் உலகம் இதுக்குமுன்னாடி பார்த்திராத புதிய இனமா கூட இருக்க வாய்ப்பிருக்கு...நான் இப்ப சொன்னது வெறும் கதை இல்ல...2 வகையான பண்டைய மனிதர்கள் ஒரே இடத்துலயும் ஒரே நேரத்துலயும் வாழ்ந்ததுக்கான புதைபடிவங்கள் கிடைச்சுருக்கு...மறைந்திருக்கும் மர்மம் என்ன?...யார் அந்த இன்னொரு வகை மனிதர்கள்?...விரிவாக அலசலாம் தந்தி டிவியின் பாட்கேஸ்ட்டில்...
