குளு குளு ஐஸ்கிரீம் அருங்காட்சியகம்: அமெரிக்காவிற்கு வெளியே இதுவே முதல் முறை

சிங்கப்பூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கண்கவர் ஐஸ்கிரீம் அருங்காட்சியகம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
குளு குளு ஐஸ்கிரீம் அருங்காட்சியகம்: அமெரிக்காவிற்கு வெளியே இதுவே முதல் முறை
x
ஐஸ்கீரிம் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள் என்று சொல்லிவிடலாம்.. அந்த அளவிற்கு ஐஸ்கிரீம் என்றுவுடன் உள்நெஞ்சம் தித்திக்கும்.... 

இப்படி கேட்டவுடன் மனதுக்கு மகிழ்ச்சியையும், சுவைத்தவுடன் வயிற்றுக்கு குளிர்ச்சியையும் தரக்கூடிய ஐஸ்கீரிம்கள்... என்றும்... குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் நொடி பொழுதில் ஈர்க்கக்கூடியவை....

அந்தவகையில், ஐஸ்கிரீம் பிரியர்களின் வயிற்றுக்கு மட்டுமல்ல கண்களுக்கும் குளிர்ச்சி தரக்கூடியதாக விளங்குகிறது, சிங்கப்பூரில் அமைந்துள்ள ஐஸ்கிரீம் அருங்காட்சியகம்... 

இதுவரை ஐஸ்கிரீம்களை பெரிதும் கொண்டாடும் அமெரிக்காவில் மட்டும் காணப்பட்ட இந்த வகை அருங்காட்சியங்கள்... தற்போது அமெரிக்காவிற்கு வெளியே முதல் முறையாக சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ளது... 

பல வண்ணங்களில் பல வகையான ஐஸ்கீரிம்கள்...  திரும்பிய திசையெல்லாம் எங்கும் எதிலும் ஐஸ்கீரிம் என நம்மை கவருகிறது, இந்த அருங்காட்சியகம்... 

இக்கட்டான கொரோனா காலகட்டத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த ஐஸ்கீரிம் அருங்காட்சியகத்தை பார்வையிட வேண்டும் என்றால் முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்... 

ஒரே நேரத்தில் அதிக மக்கள் கூடுவதை தடுக்க இந்த ஏற்பாடு என்றும், கொரோனா இல்லை என்ற சான்றிதழோ தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழோ சமர்ப்பித்தால் மட்டுமே அருங்காட்சியகத்தை பார்வையிட அனுமதி என வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து விதமான ஏற்பாடுகளையும் கையாண்டுள்ளது, அருங்காட்சியக நிர்வாகம். 

நாவிற்கு மட்டுமின்றி கண்களுக்கும் விருந்தளிக்கும் இந்த ஐஸ்கிரீம்களை தங்களது குழந்தைகளுடன் குழந்தையாய் மாறி கண்டு ருசித்து மகிழ்கின்றனர், சிங்கப்பூர் மக்கள்... 

Next Story

மேலும் செய்திகள்