விளையாட்டு திருவிழா (14.12.2018) :இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் - ஆட்டநேர முடிவில் ஆஸி. 277-6

விளையாட்டு திருவிழா (14.12.2018) : உலகக் கோப்பை ஹாக்கி காலிறுதி - இந்திய அணி போராடி தோல்வி
விளையாட்டு திருவிழா (14.12.2018) :இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் -  ஆட்டநேர முடிவில் ஆஸி. 277-6
x
விளையாட்டு திருவிழா (14.12.2018) 

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடி வருகிறது.  பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்த‌து. 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்கார‌ர்கள் FINCH ஹாரிஸ் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 112 ரன்களை சேர்த்தனர். FINCH 50 ரன்களிலும், ஹாரிஸ் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

உஸ்மான் கவாஜா, HANDSCOMB ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற, TRAVIS HEAD 58 ரன்களில் பவிலியன் திரும்பினார்.  ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்த்தது. 

இந்தியா தரப்பில் இஷாந்த் சர்மா, விஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பும்ரா, உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.  

வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என கருதப்பட்டாலும், முதல் விக்கெட்டுக்கு ஆஸ்திரேலிய அணியை 100 ரன்களுக்கு மேல் அடிக்கவிட்டது இந்தியாவின் குறையாக பார்க்கப்பட்டது. இருப்பினும், யுத்திகளை மாற்றி அடுத்தடுத்து இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திலேரியாவுக்கு நெருக்கடி கொடுத்தனர். 

ஆஸ்திரேலியாவை 300 ரன்களுக்குள் சுருட்டினால் மட்டுமே இந்தியாவுக்கு இந்தப் போட்டியில் வெற்றி வாய்ப்பு இருக்கும். இல்லையேனில் அது ஆஸ்திரேலியாவுக்கு சாதமாக மாறி, இந்தியாவுக்கு நெருக்கடி தரும்.

உலகக் கோப்பை ஹாக்கி காலிறுதி : இந்திய அணி போராடி தோல்வி 

உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதி சுற்றில் இந்தியாவும், நெதர்லாந்தும் மோதியது.  புபனேஸ்வர் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டதின் 12 -வது நிமிடத்தில் இந்திய வீரர் ஆகாஸ்தீப் முதல் கோல் அடித்தார். 15- வது நிமிடத்திலேயே பதில் கோல் அடித்து நெதர்லாந்து அணி ஸ்கோரை சமன் செய்தது.

இதன் பிறகு இரு அணி வீரர்களும் ஆக்கோரஷமாக விளையாடியதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. ஆட்டத்தின் 50- வது நிமடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை நெதர்லாந்து கோலாக மாற்றி முன்னிலை பெற்றது.

ஆனால் இந்திய அணி 54- வது நிமிடத்தில் கிடைத்த அழகான வாய்ப்பை வீணடித்தது. இதன் மூலம் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. 

43 ஆண்டுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி வீணடித்தது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் இங்கிலாந்தும், பெல்ஜியமும் மோதுகிறது. மாலையில் நடைபெறும் 2வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அலைச்சறுக்கில் அசத்தும் பார்வையற்ற பெண் : விசில் மூலம் வழிநடத்தும் பயிற்சியாளர்

உடல் வலிமையும் , கடின பயிற்சியும் இருந்தால் மட்டுமே அலைச்சறுக்கு மேற்கொள்ள முடியும்.. ஆனால், இந்த வாதத்தை உடைத்து எறிந்துள்ளார் ஸ்பெயினை சேர்ந்த பார்வையற்ற வீராங்கனை லோபஸ்..

21 வயதான லோபஸ், கைக் குழந்தையாக இருக்கும் போதே நோய் தாக்கத்தால், தன் பார்வையை இழந்தார். இருப்பினும் தன்னம்பிக்கையை இழக்காமல் லோபஸ், உலக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகி வருகிறார்.

கடல் என்றால் எப்படி இருக்கும் என்று கூட தெரியாத தமக்கு, மன அமைதியையும், நம்பிக்கையையும் இந்த அலைகள் தருவதாக கூறுகிறார் லோபஸ்..

லோபஸ்க்கு உறுதுணையாக இருப்பது அவரது பயிற்சியாளர் LUCAS..  அலைச்சறுக்கில் இருக்கும் கடினம் ஆபத்து லுகாஸ்க்கு நன்கு தெரியும்.. இருப்பினும் ஊக்கத்தை மட்டுமே அளிக்கும் லுகாஸ், வீராங்கனைக்கு பாதுகாப்பு அரனாகவும் இருக்கிறார்.

அலை லோபஸ்க்கு வடது பக்கம் வந்தால், பயிற்சியாளர் லுகாஸ் ஒரு முறை விசில் அடிப்பார்.  அதுவே அலை இடதுபக்கம் வந்தால் இரண்டு முறை விசில் அடிப்பார்.

இந்த விசிலை மட்டுமே கேட்டு லோபஸ் அலைச்சறுக்கு மேற்கொள்கிறார். இந்த அலைச்சறுக்கு போட்டிக்காக பல்வேறு பயிற்சியில் லோபஸ் ஈடுபடுகிறார்

பார்வை இல்லை என்றாலும், அதை ஒரு தடையாக தாம் எண்ணுவதில்லை என்று கூறும் லோபஸ், உலக சாம்பியன் பட்டத்தை வெல்வேன் என்று கண்கள் மிளிர நம்பிக்கையுடன் கூறுகிறார். 

இத்தாலியில் பனிச்சறுக்கு உலகக் கோப்பை

PARALLEL GIANT SLALOM .. பனிச்சறுக்கு போட்டியிலேயே மிகவும் பிரசித்திப் பெற்ற பந்தயம்... இதற்கான உலகக் கோப்பை தற்போது இத்தாலியில் நடைபெற்று வருகிறது. 

இந்தப் பந்தயத்தின் தூரம் அதிகபட்சமாக 750 மீட்டர்.. ஆனால் சாய்வலான பாதையில், போட்டியாளர்கள் வலைந்து, வலைந்து சென்று எல்லைக் கோட்டை தொட வேண்டும்

முதலில் யார் எல்லை கோட்டை தொடுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். ஒரு சுற்றில் 2 வீரர்கள் மட்டுமே போட்டியிடுவார்கள். நீல நிற கொடியின் பக்கம் ஒருவரும், சிவப்பு நிற கொடியின் பக்கம் மற்றொருவரும் பனிச்சறுக்கில் ஈடுபடுவார்கள்.

இந்த பந்தயத்தில் மொத்தம் 25 வளைவுகளை போட்டியாளர்கள் கடந்து எல்லை கோட்டை கடக்க வேண்டும். ஒரு வளைவில் கூட கடக்காமல் சென்றாலோ, இல்லை பனிச்சறுக்கு பலகையிலிருந்து காலை எடுத்தாலோ, வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். 


Next Story

மேலும் செய்திகள்