விளையாட்டு திருவிழா (13.12.2018) :ஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி - ரோஹித், அஸ்வின் காயம் காரணமாக நீக்கம்

விளையாட்டு திருவிழா (13.12.2018) :பெர்த் நகரில் வரலாறு படைத்த இந்திய அணி
விளையாட்டு திருவிழா (13.12.2018) :ஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி - ரோஹித், அஸ்வின் காயம் காரணமாக நீக்கம்
x
விளையாட்டு திருவிழா (13.12.2018)  

இந்தியா, ஆஸ்ரேலியாவுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை பெர்த் நகரில் தொடங்குகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.  வெற்றியை தொடரும் முனைப்புடன் இந்திய அணி வீரர்களும், பதிலடி தர வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஆஸதிரேலிய அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், நாளைய போட்டியில் பங்கேற்கும் 13 பேர் கொண்ட பட்டியலை இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக விஹாரியும், அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜாவும்  சேர்க்கப்பட்டுள்ளனர்.  இவ்விரு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டதே நீக்கத்திற்கு காரணம் என இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெர்த் (வாகா) WACA மைதானம் எப்போதுமே வேகப்பந்துவீச்சாளர்களின் சொர்க்கம் என்று புகழப்படும். ஆனால், இம்முறை போட்டி பெர்த்தின் புதிய மைதானத்தில் நடைபெறுகிறது. புதிய மைதானத்தின் ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக தான் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பந்து நன்றாக BOUNCE ஆகும்  என்பதால், பேட்ஸ்மேன்களுக்கு இந்தப் போட்டி கடும் சிரமத்தை அளிக்கும்.

ஆடுகளமும் பச்சை பசேலன்று இருப்பதால், இந்தியா சுழற்பந்துவீச்சாளர் இல்லாமல், புவனேஸ்வர் குமார் அல்லது உமேஷ் யாதவை சேர்த்து, 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பெர்த் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட  4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்புடனும், பொறுமையுடனும் விளையாடினால் மட்டுமே பெர்த் டெஸ்ட்டில் வெற்றி பெற முடியும். 


பெர்த் வாகா (WACA) கிரிக்கெட் மைதானம்வேகப்பந்துவீச்சாளர்களின் சொர்க்கம் என்று புகழப்படும். அந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் ஒன்றே ஒரு ஆசிய அணி இந்தியா மட்டும் தான் 2008ஆம் ஆண்டு கும்ப்ளே தலைமையிலான அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது.

சர்ச்சைகள் நிறைந்த சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்த ஆட்டம் நடைபெற்றதால் இந்தப் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

வசிம் ஜாபர் , சேவாக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை அளித்தது. சேவாக் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜாபர் 16 ரன்களில் வெளியேறினார். 

THE WALL என்று அழைக்கப்படும் டிராவிட் நங்கூரம் போல் நின்று 91 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக நின்ற கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினும் 71 ரன்கள் விளாச இந்திய அணி முதல் இன்னிங்சில் 330 ரன்கள் சேர்த்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் , இந்தியாவின் அனல் பறக்கும் வேகப்பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 212 ரன்களுக்கு சுருண்டது

118 ரன்கள் முன்னிலை பெறற இந்திய அணியில் இர்பான் பதான், சேவாக், LAXMAN ஆகியோர் பொறுப்புடன் விளையாட இந்திய அணி 294 ரன்கள் சேர்த்தது.

இதனையடுத்து 413 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. பாண்டிங், ஹசி உள்ளிட்டோர் நன்றாக விளையாடினாலும், அவர்களது விக்கெட்டுகளை முக்கிய கட்டத்தில் இந்திய அணி வீரர்கள் வீழ்த்தினர். கிளார்க், ஜான்சன் ஆகியோர் அரைசதம் விளாசி பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலிய அணி 340 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி சாதனை வெற்றி பெற்றது. அந்நிய மண்ணில் இந்தியா பெற்ற முக்கிய வெற்றிகளில் இது சிறப்பு வாய்ந்தது.

ஐ.பி.எல். 12 வது சீசன் வீரர்கள் விலை நிர்ணயம்

ஐ.பி.எல். 12 வது சீசன் வீரர்களுக்கான ஏலம் வரும் 18ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. ஏலத்தில் பங்கேற்க ஆயிரத்து மூன்று வீரர்கள் விண்ணப்பம் செய்தனர்.  அவர்களிலிருந்து 346 வீரர்களை தேர்வு செய்துள்ள ஐ.பி.எல். நிர்வாகம், வீரர்களுக்கான அடிப்படை விலைப் பட்டியலை அறிவித்துள்ளது. 

வீரர்களுக்கான அதிகபட்ச விலையாக 2 கோடி ரூபாயும், குறைந்தபட்ச விலையாக  20 லட்சம் ரூபாயும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மெக்குல்லம், சான் மார்ஷ், மலிங்கா, கோரி ஆண்டர்சன், டார்சி ஷார்ட் உள்ளிட்டோருக்கு அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்டின் குப்தீல், உனாட்கட், பாரிஸ்டோ, ஸ்டேயின், அலெக்ஸ் ஹெல்ஸ், உள்ளிட்டோடின் ஆரம்ப விலை ஒன்றரை கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

யுவராஜ் சிங், முகமது ஷமி , விதர்மன் சாஹா, அம்லா, அக்சர் பட்டேல் உள்ளிட்ட வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

இஷாந்த் சர்மா,JASON HOLDER,DARREN BRAVO,CARLOS BRATHWAITE ஆகியோரின் அடிப்படை விலை 75 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புஜாரா, மனோஜ் திவாரி, விஹாரி, இர்பான் பதான், ஆகியோரின் அடிப்படை விலை 50 லட்சம் ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதி சுற்றில் இந்தியாவும், நெதர்லாந்தும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது

புபனேஷ்வரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், இந்தியா வென்றால், 43 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி சாதனை படைக்கும். 

நெதர்லாந்து அணியும், இந்தியாவும் இதுவரை 6 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 5 போட்டிகளில் தோல்வியையும், ஒரு போட்டியில் டிராவும் கண்டுள்ளது.  

பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா சாதனை படைக்கும் என்ற எதிர்பார்புடன் நாளைய போட்டியை காண இந்திய ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர். 

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு  : நெருங்கி வரும் ஜல்லிக்கட்டு நிகழ்வு 

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நெருங்கி வருகிறது. அதிலும் புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் வரும் ஜனவரி 2ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்க உள்ளது. இதற்காக காளைகளை தயார் செய்யும் பணியில் காளைகளை வளர்ப்போர் தீவிரம் காட்டி வருகின்றனர். 

தச்சன்குறிச்சியை தொடர்ந்து மாவட்டத்தை சுற்றிலும் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து போட்டிகள் நடத்தப்படும் என்பதால் காளைகளுக்கு தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மாடுகளின் உடல்திறனை அதிகரிக்கும் வகையில் நீச்சல் பயிற்சிகள், அதன் கொம்புகளுக்கு தேவையான பயிற்சிகள் என விதவிதமான பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் விதமாக மாடுகளுக்கு சத்தான உணவுகளையும் மாடுகளை வளர்ப்போர் வழங்கி வருகின்றனர். 

ஏற்கனவே பல போட்டிகளில் வெற்றி பெற்ற காளைகளும் சரி, புதிதாக ஜல்லிக்கட்டு போட்டிகளை எதிர்கொள்ளும் காளைகளுக்கும் தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பல கட்ட பயிற்சிகளை காளைகளுக்கு வழங்கி வருவதாகவும் மாடுகளை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர். 

ஜல்லிக்கட்டு திருவிழாவுக்கு அனைத்து தரப்பும் இப்போது கொண்டாட்டங்களை தொடங்கி இருப்பது இளைஞர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது..

Next Story

மேலும் செய்திகள்