விளையாட்டு திருவிழா - 30.11.2018 -சுனாமி போல் உயர்ந்து எழும் அலை
பதிவு : நவம்பர் 30, 2018, 09:12 PM
விளையாட்டு திருவிழா - 30.11.2018 - பெண்கள் விரும்பும் சாகச விளையாட்டு
விளையாட்டு திருவிழா - 30.11.2018 

உலகின் மிக பரபலமான அலைச்சறுக்கு தொடர்களில் ஒன்று BIG WAVE NAZARE CHALLENGE. போர்ச்சுகல்லில்  NAZARE கடற்பகுதியில் இந்த பந்தயம் ஆண்டுதோறும் நடைபெறும். ஹாலிவுட் படங்களில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளை போல், ராட்சச அலை வீரர்களை விழுங்க விடாமல் துரத்தும்.

ராட்சச அலைகளிலிருந்து தப்புவது சாதாரண காரியம் அல்ல.. அலைகளில் சிக்கினால் வீரர்கள் SURFING பலகையிலிருந்து தூக்கி வீசப்படுவார்கள். நடப்பாண்டில் நடைபெற்ற BIG WAVE NAZARE CHALLENGE கோப்பையை தென்னாப்பிரிக்க வீரர் GRANT BRAKER கைப்பற்றினார். சீறி எழுந்த அலை, அவரை விழுங்கியும், அவர் பலகையிலிருந்து கீழே விழாமல் இருந்தார். 

பல்லமான பகுதியில் இந்தப் பந்தயம் நடைபெறுவதால், வீரர்கள் ஆபத்தில் சிக்குவது அதிகம். உலகின் பிரபலமாளன இந்தப் போட்டியை மக்கள் கலங்கரை விளக்கத்திலிருந்து கண்டு களிப்பார்கள். 

பெண்கள் விரும்பும் சாகச விளையாட்டு

Human Water Catapult.. தண்ணீரில் நடைபெறும் சாகச விளையாட்டு தான் இது. தண்ணீரில் உள்ள மிதவையில் ஒருவர் குதிக்கும் போது, மறுபுறத்தில் இருப்பவர், தூக்கி வீசப்படுவார். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த விளையாட்டு, தற்போது அனைத்து தீம் பார்கிலும் இடம்பெற்றுள்ளது. 

மேலிருந்து மிதவையில் குதிப்பவர்களின் எடை, வேகத்தை பொருத்தே, மிதவையில் இருக்கும் மற்றவர்களும் தூக்கி வீசப்படுவார்கள். இந்சத விளையாட்டு எப்படி உருவானது என்று உற்று நோக்கினால், அனைத்துக்கு பின்பும் இயற்பியல் காரணிகள் இருக்கும். இந்த பொழுதுப் போக்கு சாகச விளையாட்டால் விபத்துகளும் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. 

குளிர்கால பிரதான விளையாட்டு கர்லிங்

கர்லிங் என்ற இவ்விளையாட்டு பனித் தரையில் நடப்பதாகும்..  பனித்தரையின் நடுவே, ஒரே மையத்தைக்கொண்ட  நான்கு வளையங்கள் இருக்கும்.. குறிப்பிட்ட தொலைவில் இருந்து , வழுவழுப்பான கிரானைட் கல்லை வளையத்தை நோக்கி நகர்த்த வேண்டும்..  வளையத்தின் மையத்தை, கிரானைட் கல் எவ்வளவு நெருக்கமாக அடைகிறதோ , அந்த அளவை வைத்து வெற்றிப்புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன..
 
கிரானைட் கல் வழுவழுப்பாக சென்று சேர, பனித்தரையை இரண்டு பேர் தேய்த்தொண்டே செல்வர்..இரண்டு அணிகள் பங்குபெறும் இப்போட்டியில் அணிக்கு நான்கு வீரர்கள் பங்குபெறுவர். இவ்விளையாட்டில் 8 கற்கள் பயன்படுத்தப்படும்.  ஒவ்வொருவருக்கும் 2 கிரானைட் கற்கள் ஒதுக்கப்படுகிறது. 
 
'கர்லிங்' என்ற விளையாட்டு ஸ்காட்லாந்து நாட்டில் 16ம் நூற்றாண்டில் இருந்து புழக்கத்திலிருந்ததாக கருதப்படுகிறது. எனினும் கர்லிங் விளையாட்டின் முதல் உலக சாம்பியன்ஷிப் 1959 ஆண்டு தான்  ஸ்காட்லாந்தில் நடைபெற்றது.  தற்போது பெண்கள் மற்றும் சிறுமியர்களுக்கு அதிகம் பிடித்த விளையாட்டாக கர்லிங் மாறி வருகிறது.
 
கர்லிங்  விளைாட்டு, 1998ம் ஆண்டு தான்   ஒலிம்பிக் போட்டியில் 
அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண் குழுவினர், பெண் குழுவினர், கலப்பு குழுவினர் என எப்படி வேண்டுமானாலும் இவ்விளையாட்டில் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் செய்தது முதலே, ஆண்கள் பிரிவிற்கான கர்லிங் விளையாட்டில் கனடா நாட்டினர் பதக்கங்களை குவித்து வருகின்றனர். 

பெண்களை ஈர்க்கும் "ஆக்வா ஜூம்பா" உடற்பயிற்சி

மன அழுத்தத்தை குறைக்கும், பெண்களை ஈர்க்கும் ஆக்வா ஜூம்பா உடற்பயிற்சி குறித்து ஒரு தொகுப்பு உங்களுக்காக...AQUA ZUMBA.. பெண்கள், குழந்தைகளை ஈர்க்கும் புதிய உடற்பயிற்சி முறை தான் இந்த AQUA ZUMBA..தரையில் ஆடும்  ஜூம்பா நடனத்தை, தண்ணீரில் ஜாலியாக ஆடி பாடுவது தான் இதன் சிறப்பம்சமே..

தண்ணீரில் கை, கால்களை அசைப்பதே சற்று கடினம்.. ஆனால் எப்படி நடனமாடுவது என்று நீங்கள் கேட்கலாம்..??  நீச்சல் குளத்திற்கு வெளியே நிற்கும் பயிற்சியாளர், துள்ளல் போடும் இசைக்கு ஏற்ப நடனமாடுவார். அதனை தண்ணீரில் நிற்பவர்கள் ஆட முயற்சி செய்தாலே போதும்..

புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடுவது தான் இந்த பயிற்சி..இதனை மேற்கொள்வதால், மன அழுத்தம் குறைவதுடன்,உடல் எடையும் குறைந்து, உடல் வழுவை மேம்படுத்தும்.

தண்ணீர் இடுப்பு அளவு தான் இருக்கும் என்பதால், இந்த பயிற்சியை மேறகொள்வதில் எந்த ஆபத்தும் இல்லை..  60 நிமிடம் இந்த பயிற்சியை செய்தாலே 350 கலோரி குறைந்துவிடும். 

இந்த பயிற்சியின் விசஷமே நேரம் போவதே தெரியாது. இதனால் வெளிநாட்டில் சேர்ந்தவர்கள், தங்களது நண்பர்களுடன் குழுவாக இந்த பயிற்சியை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

தொடர்புடைய நிகழ்ச்சிகள்

13/06/2019 - குற்ற சரித்திரம்

13/06/2019 - குற்ற சரித்திரம்

237 views

(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

402 views

(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...?

சிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக

440 views

(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன? - கருணாஸ் சிறப்பு பேட்டி

(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன? - கருணாஸ் சிறப்பு பேட்டி

52 views

ரொக்கம் (07/09/2018)

ரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..

332 views

சொல்லி அடி - 05.07.2018

சொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...

320 views

பிற நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி

விளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்

100 views

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி?

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை

70 views

விளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்

விளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்

41 views

விளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி?

விளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி

43 views

விளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்

விளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்

29 views

விளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை

விளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.