விளையாட்டு திருவிழா - 29.11.2018 - கால்பந்து விளையாடும் ரோபோ அஷிமோ
பதிவு : நவம்பர் 29, 2018, 08:25 PM
விளையாட்டு திருவிழா - 29.11.2018 - மனிதர்களை போல உடற்பயிற்சி செய்யும் அஷிமோ
விளையாட்டு திருவிழா - 29.11.2018

அசிமோ.., அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட ரோபோ..  Advanced Step in Innovative Mobility யின் சுருக்கமே அசிமோ.

அசிமோ ரோபோவை HONDA நிறுவனமே தயாரித்தது. சுமார், 30 ஆண்டுகள் கடும் உழைப்புக்கு பிறகு இந்த ரோபோ உருவாக்கப்பட்டது. மனிதனை போல ரோபோவை நடக்க வைக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த பலன் தான் அசிமோ..

மனிதர்களின் நண்பன்கவும், சேவனாகவும் விளங்கிய அசிமோ, மனிதர்களோடு கால்பந்து விளையாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கால்பந்து விளையாடுவதற்கு முன் மனிதர்கள் போல WARM UP செய்து கொண்ட அசிமோ, பின்னர், மனிதரோடு பெனால்டி சூட் அவுட் முறையில் கோல் அடித்தது.

பின்னர் கால்பந்து கோல் கீப்பராகவும் அசிமோ செயல்பட்டது. ஆனால், அதனால் கோலை தடுக்க முடியவில்லை. கால்பந்து விளையாடி முடித்துவிட்டு, கலைப்பு அடைந்த வீரருக்கு, தனது சேவையையும் அசிமோ செய்தது. அசிமோ, மனிதர்களின் உண்மையான நண்பன் என்றால் அது மிகையல்ல..

குட்டி ரோபோக்கள் விளையாடும் கால்பந்து

உலகின் பல்வேறு ரோபோ தொழில்நுட்ப வல்லுனர்கள்  , தங்களது ரோபோக்களுடன் அணியாக இந்தப் போட்டியில் பங்கேற்பார்கள்.. REMOTE மூலம் இந்த ரோபோவை இயக்க கூடாது என்பது தான் இதன் விதி.. ஏற்கனவே PROGRAM செய்யப்பட்ட ரோபோக்கள் தான் இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும்..

இந்த குட்டி ரோபோக்கள் செய்யும் சுட்டித் தனத்தை பார்க்க இரு கண்கள் போதாது. கோல் அடிக்க, ரோபோக்கள் முயற்சிக்கும், அதனை தடுக்க வேண்டிய கோல் கீப்பர் ரோபோ, அதனை வேடிக்கை பார்க்கும் காமெடியும் அரங்கேறும். ரோபோக்கள், கோல் அடிக்க முயற்சி செய்யும் போது , கீழே விழும் காட்சியை பார்க்கவே தனி ரசிகர்கள்  பட்டாளமே உண்டு.

இந்த தொடரில் ரோபோக்கள், பல்வேறு வடிவங்களிலும் இடம்பெற்று கால்பந்து போட்டியில் பங்கேற்கும். 2050 ஆம் ஆண்டிற்குள், முழு மனித ரோபோக்களை உருவாக்கி, அதற்காக ரோபோ கால்பந்து கோப்பை தொடரை நடத்த வேண்டும் என்ற கனவுடன் இந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் உழைத்து வருகின்றனர்.                                                                                                                                                   
ரோபோக்கள் பங்கேற்கும் மல்யுத்த போட்டி

உண்மையான மல்யுத்த வீரர்களை போல், களத்திற்குள் இசையுடன் ரோபோக்கள் நடந்து வரும்...நடுவரின் துணையோடு, கயிற்றை தாண்டி களத்திற்குள் ரோபோ குதிக்கும்..

இதனைத் தொடர்ந்து ரோபோக்கள், உண்மையான மல்யுத்த வீரர்களை போலவே சண்டையிட்டு தாக்குதல் நடத்தி கொள்ளும். மல்யுத்த போட்டியில் வருவது போல், ரோபோக்கள் , ஒன்றை ஒன்று தூக்கி வீசும் காட்சிகளும் அரங்கேறும்.

ROYAL RUMBLE வகையிலான மல்யுத்த போட்டிகளும் ஜப்பானில் நடைபெறும். களத்தில் கூட்டமாக மோதும் ரோபோக்கள், மற்ற ரோபோவை களத்தை விட்டு வெளியே தள்ளும். இந்த கதை தளத்தை கொண்டு ஹாலிவுட்டில் REAL STEEL என்ற திரைப்படம் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது.

டேபிள் டென்னிஸில் ரோபோ புரட்சி

ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தும் இன்னொரு விளையாட்டு டேபிள் டென்னிஸ்..டேபிள் டென்னிஸ் வீரர்கள் தற்போது ரோபோக்களுடன் தான் பயிற்சியை மேற்கொள்கின்றனர். 

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ரோபோ,  ஒரு பயிற்சியாளரை போல் எப்படி பந்தை அடிக்க வேண்டும், உங்களால் முடியும் போன்ற ஊக்கத்தை அளிக்கும்.

இதே போல், இரண்டு ரோபோக்களும் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று விளையாடிய சம்பவமும் அரங்கேறியது. இதில் வெற்றியாளரை தீர்மானிக்க அவ்வளவு கடினமாக இருந்தது. ஏனெனில், இந்த ரோபோ பந்தை விடாமல் விளையாடிக் கொண்டே இருந்ததுசென்சார் மூலமாகவே ரோப்போக்கள் பந்தை சரியாக கணக்கிட்டு, அதற்கு ஏற்றார் போல் விளையாடுகிறது.

ஆனால், இந்த வகை வசதி இன்னும் இந்தியாவில் கொண்டு வரப்படவில்லை. இருப்பினும் டேபிள் டென்னிஸில் இந்தியா தற்போது ஒளிர தொடங்கியுள்ளதால் ,இந்த ரோப்போக்களுடன் நாமும் விளையாடும் காலம் வரும்.. 


தொடர்புடைய நிகழ்ச்சிகள்

ராஜபாட்டை (04.11.2018) - நடிகர் விவேக்

வடிவேலோடு மீண்டும் இணைய ஆசை - நடிகர் விவேக்

457 views

(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன? - கருணாஸ் சிறப்பு பேட்டி

(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன? - கருணாஸ் சிறப்பு பேட்டி

40 views

ரொக்கம் (07/09/2018)

ரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..

171 views

ஆதார் - 03.08.2018

03.08.2018 - ஆதார் அடையாள அட்டை மக்களின் பார்வையில்

211 views

சொல்லி அடி - 05.07.2018

சொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...

223 views

ஆயுத எழுத்து - 28.05.2018 ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு : முற்றுப்புள்ளியா...? அடுத்த சிக்கலா...?

ஆயுத எழுத்து - 28.05.2018 ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு : முற்றுப்புள்ளியா...? அடுத்த சிக்கலா...?ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு,தாமதமான முடிவென கூறும் கட்சிகள்..

124 views

பிற நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா (14.12.2018) :இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் - ஆட்டநேர முடிவில் ஆஸி. 277-6

விளையாட்டு திருவிழா (14.12.2018) : உலகக் கோப்பை ஹாக்கி காலிறுதி - இந்திய அணி போராடி தோல்வி

6 views

விளையாட்டு திருவிழா (13.12.2018) :ஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி - ரோஹித், அஸ்வின் காயம் காரணமாக நீக்கம்

விளையாட்டு திருவிழா (13.12.2018) :பெர்த் நகரில் வரலாறு படைத்த இந்திய அணி

9 views

விளையாட்டு திருவிழா (12.12.2018) : டாஸ் போடுவதில் புதிய மாற்றம் - இனி நாணயத்திற்கு பதில் பேட்

விளையாட்டு திருவிழா (12.12.2018) : 37வது பிறந்தநாளை கொண்டாடும் யுவ்ராஜ்

234 views

விளையாட்டு திருவிழா (10.12.2018) - அடிலெய்ட் டெஸ்டில் ஆட்டம் கண்ட ஆஸி

விளையாட்டு திருவிழா (10.12.2018) - வரலாற்று சாதனை படைத்த இந்தியா

17 views

விளையாட்டு திருவிழா (07.12.2018) - இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்

விளையாட்டு திருவிழா (07.12.2018) - அடிலெய்ட் மைதானத்தில் சாகச பயணம்

42 views

விளையாட்டு திருவிழா (06.12.2018) - ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆட்டநேர முடிவில் இந்தியா 250-9

விளையாட்டு திருவிழா (06.12.2018) - ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.