விளையாட்டு திருவிழா - 27.11.2018 - உலகக் கோப்பை ஹாக்கி தொடர்
பதிவு : நவம்பர் 27, 2018, 08:44 PM
விளையாட்டு திருவிழா - 27.11.2018 - சாதனை படைக்குமா இந்திய அணி?
விளையாட்டு திருவிழா - 27.11.2018

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர் கோலி

கிரிக்கெட் உலகின் முடி சூடா மன்னனாக விளங்கி வரும் விராட் கோலிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு..இந்த நிலையில், 2018ஆம் ஆண்டின் பெணக்கார கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார், 2வது ஆண்டாக தொடர்ந்து பெற்றார் விராட் கோலி..

2018ஆம் ஆண்டு விராட் கோலி ஈட்டிய வருமானம் எவ்வளவு தெரியுமா?? 169 கோடி ரூபாய்.. இந்த தகவலை FORBES நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது, உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர் பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் விராட் கோலி 82வது இடத்தை பிடித்துள்ளார்.  பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சையும் கோலி பின்னுக்கு தள்ளியுள்ளார்.

சமீபத்தில் ரசிகர் ஒருவரின் கருத்துக்கு தடாலடியாக கோலி பதில் அளித்து சர்ச்சையில் சிக்கினார். இருப்பினும் அந்த விவகாரம், கோலியின் வருமானத்தை பாதிக்கவில்லை. 

விஸ்வரூபம் எடுத்த மித்தாலி ராஜ் சர்ச்சை

உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் அரையிறுதி சுற்றில் இந்திய அணி தோல்வியை தழுவியது. முக்கிய ஆட்டத்தில் மித்தாலி ராஜ் அணியிலிருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்கிற்கும், மித்தாலி ராஜ்%க்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே, மித்தாலி ராஜ் அணியிலிருந்து நீக்கப்பட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், மித்தாலி ராஜ் பி.சி.சி.ஐ.க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் பயிற்சியாளர் ரமேஷ் பவார், மற்றும் டயானா ஆகியோர் தம்மை அவமானப்படுத்திவிட்டடதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

பயிற்சியாளராக தனது அதிகாரத்தை பயன்படுத்தி, ரமேஷ் பவார் அணியிலிருந்து தன்னை நீக்கியதாக மித்தாலி ராஜ் பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.

இதனையடுத்து, பயிற்சியாளர் ரமேஷ் பவாரிடமிருந்து விளக்கம் கேட்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது.  அணியின் சீனியர் வீராங்கனை என்று மித்தாலி ராஜ் சில சலுகைகளை அனுபவித்தாரா இல்லை, சீனியர் வீராங்கனையை அலட்சியமாக ரமேஷ் பவார் கையாண்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

"சின்ன தல" என அழைக்கும் தமிழக ரசிகர்கள் 

1986ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் முராட்நகரில் சுரேஷ் ரெய்னா பிறந்தார். சிறு வயதிலேயே, தனது பெற்றோரை பிரிந்து கிரிக்கெட்டிற்காக விளையாட்டுத் துறைக்கு சொந்தமான விடுதியில் தங்கினார் ரெய்னா. 

அங்கு மற்ற மாணவர்கள் ரெய்னாவை தொடர்ந்து ராகிங் செய்ய, தற்கொலை செய்யும் முடிவுக்கு சென்றார். அந்த தருணத்தில் தற்கொலைக்கே துணிந்த நாம்.. ஏன் வாழ்க்கையை ஒரு கை பார்க்க கூடாது என்று நினைத்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார். 

இதற்கு பலனாக, தனது 19வது வயதில் இந்திய அணியில் இடம் பிடித்தார் ரெய்னா.  FIELDING ல் மின்னல் வேகத்தில் செயல்பட்ட ரெய்னா, 2008 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணிக்காக களமிறங்கி தான் யார் என்பதை நிரூபித்தார்.

இந்திய அணியில் உள்ளே, வெளியே என இருந்த ரெய்னா, 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு நிரந்தர இடம் பிடித்தார். டி20 போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர், களமிறங்கிய முதல் டெஸ்ட்டில் அதிக ரன் விளாசிய இந்திய வீரர் என்று பல்வேறு சாதனைகளை படைத்தார். 

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதி, அரையிறுதியில் ரெய்னாவின் ஆட்டம் இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் களமிறங்கிய வீரர், ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன் விளாசிய வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். இதனால் ரெய்னாவை சின்ன தல என்று தமிழக ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர். ரெய்னா மீண்டும் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. 


கால்பந்தால் இப்படியும் விளையாடலாம் !!

STREET STYLE FOOTBALL...  கால்பந்தை கீழே விழாமல் உடலில் வைத்து மேற்கொள்ளும் சாகசம்..கால்பந்து வீரர்கள் அனைவருமே, கால்பந்தை வைத்து கொண்டு சாகசம் மேற்கொள்வதில் வல்லவர்கள். ஆனால் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு இசைக்கு ஏற்ப கால்பந்து சாகசம் மேற்கொள்வது கடினமே..

STREET STYLE FOOTBALL க்கு என உலகக் கோப்பை போட்டி போலாந்தில் நடைபெற்றது. இதில் இறுதிச் சுற்றில், பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்திய நார்வே வீரர் ERLEND சாம்பியன் பட்டம் வென்றார். இதே போன்று மகளிர் பிரிவில் போலாந்து வீராங்கனை மினிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 

இந்த சாகசத்தை நமது ஊர் வீரர், வீராங்கனைகளும் சிறப்பாகவே மேற்கொள்கிறார்கள். ஆனால், இந்த விளையாட்டு குறித்து விழிப்புணர்வு இல்லாததால், அவர்களால் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல முடியவில்லை. கால்பந்தை மட்டுமே உயிராகவும், உணவாகவும் கருதும் வீரர், வீராங்கனைகள் இந்த சாகசத்தை எளிதில் மேற்கொள்வார்கள்.. 
 

தொடர்புடைய நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா - 30.11.2018 -சுனாமி போல் உயர்ந்து எழும் அலை

விளையாட்டு திருவிழா - 30.11.2018 - பெண்கள் விரும்பும் சாகச விளையாட்டு

14 views

விளையாட்டு திருவிழா - 29.11.2018 - கால்பந்து விளையாடும் ரோபோ அஷிமோ

விளையாட்டு திருவிழா - 29.11.2018 - மனிதர்களை போல உடற்பயிற்சி செய்யும் அஷிமோ

13 views

விளையாட்டு திருவிழா - 26.10.2018 - இந்தியா Vs மே.இ.தீவுகள்: நாளை 3வது ஒருநாள்

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சனிக்கிழமை புனேவில் நடைபெறுகிறது.

14 views

பிற நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா (12.12.2018) : டாஸ் போடுவதில் புதிய மாற்றம் - இனி நாணயத்திற்கு பதில் பேட்

விளையாட்டு திருவிழா (12.12.2018) : 37வது பிறந்தநாளை கொண்டாடும் யுவ்ராஜ்

80 views

விளையாட்டு திருவிழா (10.12.2018) - அடிலெய்ட் டெஸ்டில் ஆட்டம் கண்ட ஆஸி

விளையாட்டு திருவிழா (10.12.2018) - வரலாற்று சாதனை படைத்த இந்தியா

16 views

விளையாட்டு திருவிழா (07.12.2018) - இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்

விளையாட்டு திருவிழா (07.12.2018) - அடிலெய்ட் மைதானத்தில் சாகச பயணம்

41 views

விளையாட்டு திருவிழா (06.12.2018) - ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆட்டநேர முடிவில் இந்தியா 250-9

விளையாட்டு திருவிழா (06.12.2018) - ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.

11 views

விளையாட்டு திருவிழா (05.12.2018) - WWE போட்டியில் இந்தியர்களுக்கு வாய்ப்பு!

விளையாட்டு திருவிழா (05.12.2018) - இந்தியா Vs ஆஸி - நாளை முதல் டெஸ்ட்

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.