விளையாட்டு திருவிழா - 21.11.2018 -இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டி

விளையாட்டு திருவிழா - 21.11.2018 -4 ரன் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி
விளையாட்டு திருவிழா - 21.11.2018 -இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டி
x
விளையாட்டு திருவிழா - 21.11.2018

பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டார்சி ஷார்ட்(DARCY SHORT) 7 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் FINCH 27 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதிரடியாக ஆட முற்பட்ட கிறிஸ் லீன் 37 ரன்களில் வெளியேற, மெக்ஸ்வல் 46 ரன்கள் விளாசினார். இதனால் 17 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டு இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

17 ஓவரில் 174 ரன்களை எடுக்க வேண்டும் என்று இலக்கு இந்திய அணிக்கு மாற்றி அமைக்கப்பட்டது. ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், கேப்டன் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற, தவான் 76 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். சரிவிலிருந்த இந்திய அணியை தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஜோடி அதிரடியாக விளையாடி மீட்டது. இருவரும் முக்கிய கட்டத்தில் ஆட்டமிழக்க இந்திய அணி 17 ஓவர் முடிவில் 169 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது

எப்போதும் 3வது வீரராக களமிறங்கும் விராட் கோலி 4வது வீரராக களமிறங்கியது, தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

குர்னல் பாண்டியா வீசிய 4 ஓவரில் அவர் 55 ரன்களை வாரி வழங்கினார். மேலும், பேட்டிங் செய்த போது கடைசி ஓவரில் 2 ரன்களை எடுத்து, தினேஷ் கார்த்திக்கிற்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பை கிடைக்காமல் செய்துவிட்டார். அடுத்த 2 பந்திலும் அவர் ரன் எடுக்கவில்லை. இது இந்தியா செய்த மெகா தகூறகளில் ஒன்று

போட்டியின் பாதியில் மழை குறுக்கிட்டதால், இந்தியா பேட்டிங் செய்யும் போது கடைசி கட்டத்தில் ஆடுகளத்தின் தன்மை தலைக்கீழ் மாறியது. இதனால் பேட்டிங் செய்ய இந்திய வீரர்கள் தடுமாறினர். 

ஸ்பைடர் கேமிராவை பதம் பார்த்த மேக்ஸ்வெல்...

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் விளாசிய பந்து, அந்தரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஸ்பைடர் கேமிராவை பதம் பார்த்தது.  ஆட்டத்தின் 15 புள்ளி 5வது ஓவரில் குர்னல் பாண்டியா வீசிய பந்தை மெக்ஸ்வேல் விளாசினார். ஆனால், அது அந்தரத்தில் இருந்த ஸ்பைடர் கேமிராவை தாக்கியது. இதனால் அந்த பந்து கணக்கில் எடுத்து கொள்ளப்படாது என்று நடுவர் அறிவித்தார். சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய ஸபைடர் கேமிரா மீது பந்து பட்டதை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். 


கார் பந்தயத்தில் கோர விபத்து : சாலையிலிருந்து பாய்ந்த பந்தய கார்

சீனாவின் மக்காவ் நகரில் நடைபெற்ற FORMULA 3 கார் பந்தயத்தில் ஜெர்மனி வீரர் SOPHIYA கோர விபத்தில் சிக்கினார்.வளைவு ஒன்றில் வேகமாக திரும்பும் போது, சீன வீரரின் கார் மீது மோதி, ஜெர்மனி வீரரின் கார், புகைப்படக்கலைஞர் அமைந்திருந்த மாடத்தில் பாய்ந்தது.

இதில் ஜெர்மனி வீரர் SOPHIYA. புகைப்பட கலைஞர் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஜெர்மனி வீரர் SOPHIYA வுக்கு 11 மணி நேரம் வரை அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.  

இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்பு ஏற்படவில்லை. ஜெர்மனி வீரர் SOPHIYA குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

உலகின் ஆபத்தான பனிச்சறுக்கு சாகசம் : இத்தாலி மலைத்தொடரில் நிகழ்த்தி அசத்தல். FREESTYLE - ROAD SLOPE STYLE இருக்கும் பனிச்சறுக்கும் போட்டியிலேயே மிகவும் ஆபத்தான சாகச விளையாட்டு.

இத்தாலியின் மிகவும் உயரமான மலைத் தொடர் ஒன்றில், இரண்டு வீரர்கள், 555 மீட்டர் தூரம் வரை ஆபத்தான வகையில் பனிச்சறுக்கு சாகசத்தை மேற்கொண்டனர். 
பல்வேறு தடைகளையும் கடந்து அந்த வீரர்கள் மேற்கொண்ட சாகசம் காண்போரை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்தது
MAYR , EDER என இரண்டு வீரர்களும் ROAD SLOPE STYLE  சாகசத்தை 6 மாத கடும் பயிற்சிக்கு பிறகு, இந்த மலைத் தொடரில் சாகசத்தை மேற்கொண்டனர். 

கடலுக்கு அடியில் நடக்கும் சாகசம் : மீன்களுடன் கொஞ்சி விளையாடலாம்..

SEA WALKER..!!  சுற்றுலாப் பயணிகளை கவர உலகம் முழுவதும் உள்ள பிரபலமான சாகச விளையாட்டு..கடலுக்குள் 3 முதல் 5 அடி ஆழத்தில், நீங்கள் நடந்து சென்று மீன்களுடன் விளையாடலாம்.. இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் இந்த சாகசம் மிகவும் பிரபலம்..

கடலுக்கு அடியில் சுவாசிக்க பிரத்யேக ஹெல்மட், நம்மை பாதுகாக்க நீண்ட CABLE ROPE ஆகியவை தான் 
SEA WALKING க்கு தேவைப்படும் முக்கிய கருவிகள்..

கடலுக்கு அடியில் நடந்து செல்லும் போது, அங்குள்ள மீன்களுக்கு நீங்கள் உணவும் வழங்கலாம்..மீனுக்கு நாம் உணவாகி விடுவோமோ என்ற பயம் நிச்சயம் வரும்..அதற்கு தான், பாதுகாக்கப்பட்ட இடத்தை தேர்வு செய்து முறையான கண்காணிப்புக்கு பிறகே, SEA WALKING க்கு அனுமதிக்கப்படுவார்கள்

மறக்க முடியாத அனுபவத்தை நீங்கள் விசேஷ கேமிராக்கள் மூலம் பதிவும் செய்து கொள்ளலாம். முதன் முதலாக கப்பல்கள் கட்ட தான், இந்த தொழில்நுட்பம் , பிறகு தான் சாகசத்திற்கும், சுற்றுலாப் பயணிகளை கவர பயன்படுத்தப்பட்டது. 




Next Story

மேலும் செய்திகள்