விளையாட்டு திருவிழா - 20.11.2018 - இந்தியா Vs ஆஸி. நாளை முதல் டி-20 போட்டி

விளையாட்டு திருவிழா - 20.11.2018 - வெற்றியுடன் தொடரை தொடங்குமா இந்தியா?
விளையாட்டு திருவிழா - 20.11.2018 - இந்தியா Vs ஆஸி.  நாளை முதல் டி-20 போட்டி
x
விளையாட்டு திருவிழா - 20.11.2018

இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான முதல் இருபது ஓவர் போட்டி நாளை பிரிஸ்பேன் நகரில் தொடங்குகிறது. தோனி, ரெய்னா ஆகியர் இல்லாமல் அந்நிய மண்ணில் முதல் முறையாக இருபது ஓவர் போட்டியில் இந்தியா விளையாடுகிறது. 

இந்தப் போட்டியில் களமிறங்கும் 11 பேர் கொண்ட அணியை இந்தியா இன்றே அறிவித்துள்ளது. அதன் படி ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், குர்னல் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது ஆகியோர் களமிறங்க உள்ளார். மனிஷ் பாண்டே, சாஹல் ஆகியோர் இடம்பெறவில்லை. 

இந்த அணியில் குல்தீப் யாதவ், கலீல் அகமது, குர்ணல் பாண்டியா ஆகியோர் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் சர்வதேச டி 20 போட்டியில் விளையாட உள்ளனர். பேட்டிங், பந்துவீச்சு என இந்திய அணி பலம் வாய்ந்ததாக கருதினாலும், ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிட முடியாது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த முறை தோனி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியா சென்ற போது, 3 இருபது ஓவர் போட்டிகளையும் முழுமையாக வென்று சாதனை படைத்துள்ளது. ஆனால், இம்முறை தோனி இல்லை. கேப்டனாக கோலி இருந்தாலும், தோனி தான் அணியின் யுத்ததிகளை கையாள்வார். இப்போது கோலி தன்னிச்சையாக செயல்படும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தப் போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.20 மணிக்கு தொடங்குகிறது. 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் : நியூசிலாந்து அணி திரில் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது. அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 153 ரன்களும், பாகிஸ்தான் அணி 227 ரன்களும் சேர்த்தது. 74 ரன்கள் பின்தங்கிய நியூசிலாந்து அணி, 2வது இன்னிங்சில் 249 ரன்கள் குவித்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, வெற்றியை நோக்கி சென்ற நிலையில், நியூசிலாந்து வீரர் அஜேஸ் பட்டேலின் சுழலில் சிக்கி 171 ரன்களில் அந்த அணி சுருண்டது,

வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதனை எடுக்க முடியாமல் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் அசார் அலி ஆட்டமிழந்தார்.  இதனால் பாகிஸ்தான் அணி  அதிர்ச்சி தோல்வியை தழுவியது. முதல் இன்னிங்சில் கூடுதல் ரன்களை பெற்றுவிட்டு, பாகிஸ்தான் அணி தோற்றது, அந்த அணி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.  இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜேஸ் பட்டேல், அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மும்பையில் பிறந்த இவர், 8 வயதில் குடும்பத்துடன் நியூசிலாந்துக்கு குடியேறியுள்ளார். 

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : முதல் பதக்கத்தை உறுதி செய்த மேரி கோம்

மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவின் நட்சத்திர வீராங்னனை மேரி கோம், பதக்கத்தை உறுதி செய்தார். டெல்லியில் நடைபெற்ற காலிறுதி சுற்றில், சீன வீராங்கனை WU YU வை 5க்கு0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் 7வது முறையாக மேரி கோம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்ல உள்ளார். 

இதே போன்று மற்றொரு இந்திய வீராங்கனை லவ்லினாவும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 69 கிலோ எடைப் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய வீராங்கனையை 5க்கு0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு 2வது பதக்கம் உறுதியாகி உள்ளது. 

ஆடுகளத்தில் இணைந்த காதல் ஜோடி

அலஸ்காவில் மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த வாலிபால் வீராங்கனையிடம் இளைஞர் ஒருவர் காதலை தெரிவித்து சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வாலி பால் வீராங்கனை JENNA ELLER விளையாடி கொண்டிருந்த போது பந்தை தவறவிட்டார். அப்போது பின்னால் வந்த இளைஞன் KYLE, காதலியிடம் பந்து ஒன்றை அளித்து என்னை திருமணம் செயது கொள்கிறாயா என்று கேட்டவுடன், வீராங்கனை மகிழ்ச்சி கடலில் மூழ்கினார்.  காதலர்களை விளையாட்டு களம் இணைத்த இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

வீடு ஆதரவற்றவர்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து

வீடு ஆதரவற்றவர்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி மெக்சிகோவில் நடைபெற்றது. கடந்த 2 வாரங்களாக நடைபெற்ற இந்த தொடரில் 40 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 

மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற ஆடவர் பிரிவின் இறுதி சுற்றில், மெக்சிகோவும், சிலி அணியும் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6க்கு3 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ வென்றது. மகளிர் பிரிவில் கொலம்பியா அணியும், மெக்சிகோவும் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 5க்கு3 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ திரில் வெற்றி பெற்றது.

ஆடவர், மகளிர் என இருப் பிரிவுகளிலும் மெக்சிகோ அணி சாம்பியன் பட்டம் வென்றது. வீடு ஆதரவற்றவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக கடந்த 2003ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 

2018 உலகக் கோப்பை ஹாக்கி தொடர் : பாடலுக்கான டீசரை வெளியிட்ட ரஹ்மான்

உலக கோப்பை ஹாக்கி போட்டிக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்த பாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஷாரூக் கான், நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். 







Next Story

மேலும் செய்திகள்