விளையாட்டு திருவிழா - 19.11.2018 - ஆஸி மண்ணில் சாதிக்குமா இந்தியா?

விளையாட்டு திருவிழா - 19.11.2018 - ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி , 3 டி20 போட்டி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட நெடுந்தொடரில் விளையாடுகிறது.
விளையாட்டு திருவிழா - 19.11.2018 - ஆஸி மண்ணில் சாதிக்குமா இந்தியா?
x
விளையாட்டு திருவிழா - 19.11.2018    

தோனி, ரெய்னா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள்  இல்லாமல் முதல் முறையாக அந்நிய மண்ணில் இந்தியா இருபது ஓவர் தொடரில் பங்கேற்கிறது. 

பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கி சின்னாப்பின்னமான ஆஸ்திரேலிய அணி தொடர் தோல்வியால் துவண்டு போய் உள்ளது.  ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணியை , டெஸ்ட் போட்டிகளில் எளிதில் வீழ்த்தி , வரலாற்று சாதனை படைக்க அருமையான வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.

ஆனால் கிடைக்கும் பொன்னான வாய்ப்புகளை எல்லாம், தவறான அணுகுமுறை மற்றும் யுத்திகளால் ரவி சாஸ்த்ரி, விராட் கோலி ஆகியோர் வீணடித்து வருகின்றனர். 

இதனால் செய்த தவறை திருத்திக் கொண்டு, நேர்த்தியான ஆட்டத்தை இந்தியா வெளிப்படுத்தினால், இந்த தொடர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மைல்கல்லாக அமையும். 

ஆஸதிரேலிய ஆடுகளத்தில் பொதுவாக பந்து நன்றாக எழும்பும் என்பதால், இதனை சமாளிக்க இந்திய வீரர்கள் விசேஷ பயிற்சியை செய்து வருகின்றனர். ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பான ஆட்டத்தை இந்திய வீரர்கள் வெளிப்படுத்துவார்கள் என்று அதிரடி வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

வெலன்சியா மோட்டோ ஜி.பி. பைக் பந்தயம்

வெலன்சியா மோட்டோ ஜி.பி. பைக் பந்தயத் தொடரின் சாம்பியன் பட்டத்தை  இத்தாலி வீரர் Andrea Dovizioso வென்றார்.  ஸ்பெயினின் வெலன்சியா நகரில் நடைபெற்ற இந்த போட்டிக்கு முன்  மழை பெய்ததால்,, பந்தயத் தளம் ஈரமாக இருந்தது. இதனால் தண்ணீர் தெறித்தப்படி பைக்கள் சீறிப் பாய்ந்தன. 

சாலை ஈரமாக இருந்ததால், போட்டியாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு போட்டியாளர்கள் விபத்தில் சிக்கினர். பந்தய தூரத்தை 24 நிமிடம் மூன்று புள்ளி நான்கு வினாடிகளில் கடந்து இத்தாலி வீரர் Andrea Dovizioso முதலிடத்தை தட்டிச் சென்றார். 

இந்தப் போட்டியின் போது விபத்தில் சிக்கிய இத்தாலி வீரர் ROSSI. மீண்டு வந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். இந்ப் பந்தயத்தின் மூன்றாவது பிரிவில் 15 வயது வீரர் துருக்கியை சேர்ந்த CAN ONCU பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

உலக ஏ.டி.பி. பைனல்ஸ் தொடர் : சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வெரேவ்

உலக ஏ.டி.பி. பைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் யாருமே எதிர்பாராத வகையில் உலகில் முதல் வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சுடன், ஜெர்மனியின் இளம் வீரர் ஸ்வெரேவ் மோதினார்.

போட்டி தொடங்கியதில் இருந்தே ஸ்வெரேவ் தனது அதிரடி ஆட்டத்தால் ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 6க்கு4, 6க்கு3 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி, முதல் முறையாக ஏ.டி.பி. உலக டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றினார். 

இந்த வெற்றியை நம்ப முடியாமல் ஸ்வெரேவ் தரையில் படுத்து கொண்டார். இந்த வெற்றியின் மூலம் 23 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.டி.பி பைனல்ஸ் பட்டத்தை வென்ற ஜெர்மனி வீரர் என்ற சாதனையை ஸ்வெரேவ் படைத்தார்.இளம் வயதிலேயே ஸ்வெரேவ் சாதனை படைப்பதாகவும், அவருக்கு சிறப்பான எதிர்காலம் அமைந்திருப்பதாக ஜோகோவிச் பாராட்டு தெரிவித்தார். 


    

Next Story

மேலும் செய்திகள்