விளையாட்டு திருவிழா - 16.11.2018 - ஐ.பி.எல் - நீக்கப்பட்ட வீரர்களின் விவரம்

விளையாட்டு திருவிழா - 16.11.2018 - ஐ.பி.எல். 12வது சீசனில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் டிசம்பரில் நடைபெறுகிறது.
விளையாட்டு திருவிழா - 16.11.2018 - ஐ.பி.எல் - நீக்கப்பட்ட வீரர்களின் விவரம்
x
விளையாட்டு திருவிழா - 16.11.2018 

ஐ.பி.எல். 12வது சீசனில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் டிசம்பரில் நடைபெறுகிறது. இந்நிலையில்,  எந்ததெந்த வீரர்களை அணி நிர்வாகம் நீக்கியுள்ளது என்பதை ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மெக்குல்லம், குயின்டன் டி காக், கோரி ஆண்டர்சன், சர்பிராஸ் கான் ஆகியோரை பெங்களூரு அணி நீக்கியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி,  முஸ்தாஃபிசுர் ரஹ்மான், பாட் கம்மின்ஸ், டுமினி உள்ளிட்ட 10 வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

டெல்லி அணியிலிருந்து கம்பீர், ஜேசன் ராய், மெக்ஸ்வேல், முகமது ஷமி, விஜய் சங்கர் உள்ளிட்ட 12 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

ஜதராபாத் அணி, தவான்,விதர்மன் சாஹா, அலெக்ஸ் ஹெல்ஸ் உள்ளிட்ட 9 வீரர்களை நீக்கியுள்ளது.

கொல்கத்தா அணி மிட்செல் ஜான்சன், மிட்செல் ஸ்டார்க் ஐயும், சென்னை அணி மார்க் வூட்டை ஆகியோரை நீக்கியுள்ளது. 

ராஜஸ்தான் அணி உனாட்கட், டார்சி ஷார்ட், BEN LAUGHLIN ஆகியோரை தேர்வு செய்யவில்லை. 
ஐ.பி.எல். நீக்கப்பட்ட வீரர்கள்

பெங்களூரு அணி

மெக்குல்லம், 
குயின்டன் டி காக், 
கோரி ஆண்டர்சன், 
சர்ஃபிராஸ் கான் 

மும்பை அணி

முஸ்தாஃபிசுர் ரஹ்மான்
பாட் கம்மின்ஸ்
டுமினி 

டெல்லி அணி
கம்பீர்
ஜேசன் ராய்
மெக்ஸ்வேல்
முகமது ஷமி
விஜய் சங்கர் 

ஐதராபாத் அணி
தவான்,
விதர்மன் சாஹா, 
அலெக்ஸ் ஹெல்ஸ் 

கொல்கத்தா அணி
மிட்செல் ஜான்சன், 
மிட்செல் ஸ்டார்க் 

சென்னை அணி
மார்க் வூட்

ராஜஸ்தான் அணி 
உனாட்கட்
டார்சி ஷார்ட்
பென் லாஃபிளின் 

பட்டம் விடும் விழாவின் முக்கிய போட்டி

KITE FIGHTING..!! நம் ஊர் சிறுவர்கள் மொட்டை மாடியில் விளையாடும் ஆட்டம் தான் இது..  உயர பறக்கும், அடுத்தவர்களின் காத்தாடியை அறுத்து கீழே தள்ளுவது தான் இந்தப் போட்டி

இந்தப் போட்டி ROKAKU BATTLE என்ற பெயரில் பல்வேறு KITE FESTIVAL நிகழ்ச்சியில் நடைபெறும்.

இந்தியா, சீனா,சிங்கப்பூர், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்படும் KITE FESTIVAL களில் இந்தப் போட்டி இடம்பெறாமல் இருக்காது. 

ஆனால், இந்த வகை போட்டிக்காக மஞ்சா கயிறு, நம் ஊர்களில் பயன்படுத்தவதால், பல்வேறு விபத்துகள் ,உயிர் இழப்புகள் நிகழ்கிறது. இதனால் பட்டம் விடுவதற்கு நம் ஊர்களில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

KITE FIGHT தவிர, KITE FESTIVAL களில் , யார் பட்டம் பெரியதாக உள்ளது, யார் பட்டம் வித்தியாசமாக உள்ளது என்பதை வைத்து பரிசுகளும் வழங்கப்படும்.  

உலக ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடர்

உலக ஏ.டி.பி. டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் தகுதி பெற்றுள்ளார். லண்டனில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர் கேவின் ஆண்டர்சனை எளிதில் வீழ்த்திய ஃபெடரர் 15வது முறையாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 

நிஜத்தில் ஒரு வீடியோ கேம் 

சர்வ காலமும் வீடியோ கேம்களில் மூழ்கி கிடக்கும் இளைஞர்களை, அதிலிருந்து மீட்க அமெரிக்காவில் தினமும் புத்தம் புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் NERF BLASTER என்ற பொம்மை துப்பாக்கிகளை பயன்படுத்தி, விளையாடப்படும் போட்டி , இளைஞர்களை அதிகளவு ஈர்த்து வருகிறது.

வீடியோ கேம்மில் வருவது போல், இந்த துப்பாக்கிகளை வைத்து, பிளாஸ்டிக் டம்ளர்களை சுட்டு வீழ்த்த வேண்டும். எத்தனை குண்டுகளில் சுட்டு வீழ்த்துகிறமோ, அதன் படி புள்ளிகள் வழங்கப்படும். 

பின்னர், பலூன்களை சுட்டு வீழ்த்தி, வளைவிற்குள் பாய்ந்து சாகசத்தை முடிக்க வேண்டும். இருப் பிரிவுகளாக விளையாடப்படும் இந்தப் போட்டியில், புள்ளிகளை வைத்து வெற்றியாளர்கள் முடிவு செய்யப்படுகிறார்கள். 

வீடியோ கேம எப்படி இருக்குமோ, அதனை நிஜத்தில் கொண்டு வந்து இளைஞர்களுக்கு அந்த அனுபவத்தை தருவது தான், இந்த விளையாட்டின் முக்கிய அம்சம். இதனால் இளைஞர்கள் செல்போனை தவிர்ப்பதோடு, ஓடி ஆடி விளையாடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள உதவுகிறது. 




Next Story

மேலும் செய்திகள்