விளையாட்டு திருவிழா - 09.11.2018 - ஒலிம்பிக்கில் மகளிர் மட்டும் பங்கேற்கும் விளையாட்டு....

விளையாட்டு திருவிழா - 09.11.2018 - நீச்சல், நடனம், ஜிம்னாஸ்டிக் என மூன்றும் சேர்ந்த விளையாட்டு
விளையாட்டு திருவிழா - 09.11.2018 - ஒலிம்பிக்கில் மகளிர் மட்டும் பங்கேற்கும் விளையாட்டு....
x
விளையாட்டு திருவிழா - 09.11.2018

SYNCHRONISED SWIMMING.. ஒலிம்பிக்கில் மகளிர் மட்டும் பங்கேற்கும் விளையாட்டு.. இந்தப் போட்டிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.. காரணம் என்ன என்பதற்கு இந்த காட்சிகளே சான்று...

நீச்சல், நடனம், ஜிம்னாஸ்டிக் என மூன்றும் இணைந்தது தான் SYNCHRONISED SWIMMING. இந்த விளையாட்டு 1891 ஆம் ஆண்டு முதல் முறையாக ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது. பின்னர் பிரபலம் அடைந்து, 1984 ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் இடம்பெற்று வருகிறது.

இந்த விளையாட்டில் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இசைக்கு ஏற்ப தண்ணீரில் நடனமாடுவது, ஜிம்னாஸ்டிக் சாகசங்களை மேற்கொள்வது பார்ப்பதற்கு சுலபமாக தெரிந்தாலும், இந்த போட்டியில் பங்கேற்க வீராங்கனைகள், தங்கள் வாழ்நாளில் முக்கால்வாசியை பயிற்சிக்காகவே செலவிட வேண்டும்..குறிப்பாக தண்ணீரில் தலைக்கீழ் நின்று காலை இசைக்கு ஏற்ப அசைப்பது மிகவும் கடினம்.

தண்ணீரில் அதிக நேரம் இருக்க வேண்டும் என்பதால் மூக்கில் கிளிப் போன்ற கருவியை பொருத்திக் கொண்டு வீரர்ங்களைகள் களமிறங்குவார்கள்.. வீராங்கனைகள் ஒரே மாதிரி நடனம் ஆடுவது, சவாலான ஜிம்னாஸ்டிக சாகசங்களை தண்ணீரில் மேற்கொள்வதை பொருட்டு புள்ளிகள் வழங்கப்படும். 

உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களும் பங்கேற்கும் வகையில் கலப்பு இரட்டையர் பிரிவு இடம்பெற்றுள்ளது. 

டென்னிஸ் போட்டி : கிரீஸ் வீரர் அசத்தல் வெற்றி

இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில், கிரீஸ் வீரர் STEFANUS TSITSIPAS , போலந்து வீரர் HUBERT HURKACK -ஐ எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில், கிரீஸ் வீரர் வெற்றி பெற்று, அரை இறுதிக்கு முன்னேறினார். 

அரை இறுதியில் ரஷிய வீரருடன் மோதல்

இந்த போட்டியை ஏராளமானோர் நேரில் பார்த்து ரசித்தனர். இதனிடையே,குரூப் ஏ - பிரிவின் அரை இறுதியில் கிரீஸ் வீரர் STEFANUS TSITSIPAS , ரஷியாவின் ANDREY RUBLEV - ஐ எதிர்கொள்கிறார்.

ஜிம்னாஸ்டிக்கும், கூடைப்பந்தும் சேர்ந்த விளையாட்டு...

SLAM BALL.. கூடைப்பந்தின் மற்றொரு பரிணாமம் தான் இந்த விளையாட்டு..

2002ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த MASON GORDON என்பவரால் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டது. மனிதர்கள் சாதாரணமாக எம்பி பந்தை கூடைக்குள் போடுவதே இவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தால், TRAMPOLINE உதவியுடன் எம்பினால் எப்படி இருக்கும் என்று யோசித்த போது உருவானது தான் இந்த SLAM BALL போட்டி. சுலபமாக சொல்ல வேண்டும் என்றால் ஜிம்னாஸ்டிக்கும், கூடைப்பந்தும் இணைந்தது தான் இந்த SLAM BALL.. 

கூடைப்பந்து ஆடுளத்தின் இரு முனையிலும், நான்கு TRAMPOLINE அமைக்கப்பட்டு இருக்கும்.  20 நிமிடம் நடைபெறும் இந்தப் போட்டி , 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கும்..

இந்த விளையாட்டு அறிமுகமான ஒரு வருடத்திலே பெரும் பிரபலமானது. SLAM BALL  க்கு என சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கப்பட்டன. இது ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. இந்த விளையாட்டை குழந்தைகள் அதிகம் விரும்பி பார்த்ததால்  CARTOON NETWORK சேனலிலும் இந்தப் போட்டி ஒளிபரப்பபட்டது.

SLAM BALL விளையாட்டில் சாகசத்திற்கு எப்படி பஞ்சமில்லையோ, அதே போன்று ஆபத்திற்கும் பஞ்சமில்லை. வீரர்கள் புள்ளியை குவிக்க, எதிரணி வீரர்கள் தடுக்க முயற்சிக்கும் போது, காயங்கள் , மோதல்கள் ஏற்படுவதுண்டு.

SLAM BALL போட்டி ஆசியாவிலும் விளையாடப்பட்டு வருகிறது. SLAM BALL விளையாட்டு குறித்து பல திரைப்படங்களிலும் வந்தது உண்டு..  இந்த விளையாட்டு உருவானது 2002ஆம் ஆண்டு ஆனால், 1989 ஆம் ஆண்டே வெளியான BACK TO THE FUTURE என்ற திரைப்படத்தில் 2015 ஆம் ஆணடில் SLAM BALL விளையாட்டு பிரபலமானது போல் ஒரு காட்சி வரும். இதனால், இந்தப் படத்தை பார்த்து தான், இந்த விளையாட்டே உருவானதா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழாமல் இல்லை. 

அதிதீவிர சாகச விளையாட்டு "ஸ்னோ கைட்டிங்"

காற்றில் பட்டத்தை பறக்க விட ஆசைபடுவோர் ஒரு புறம் , சறுக்கி விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர் ஒரு புறம்,  ஆனால் இவ்விரண்டையும் ஒரு சேர இயற்கை கொஞ்சும் பனி மலைகளில் விளையாடினால்? அது தான் ஸ்னோ கைட்டிங்...

கையில் பட்டம், காலில்  snow board என்று காற்றில் பறக்கும் பட்டத்தின் வேகத்திற்கு ஏற்ப சறுக்கி கொண்டே விளையாடப்படும் இந்த விளையாட்டு, அதிதீவிர சாகச விளையாட்டுகளுள் ஒன்று..

சாதாரணமாக பட்டத்தை பறக்கவிடுவதிலேயே பல சிரமம், காற்றடிக்கும் திசைதான் பட்டத்தின் வேகத்தை தீர்மானிக்கிறது. 
இதில் கால்களில் ஸ்னோ போர்ட்களை மாட்டிக் கொண்டு இவர்கள் பல்டி அடிப்பது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. 

அமெரிக்கா, ஐஸ்லாந்து, நியூஸ்லாந்து உள்ளிட்ட குளிர் பிரதேச நாடுகளில் விளையாடப்படும் இந்த விளையாட்டு
குறிப்பாக ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் களைகட்டுகிறது. 

இதில் தற்போது சர்வதேச அளவிலான போட்டிகளும் நடத்தப்படுகின்றன.போட்டியின் போது வானில் கண்கவர் பட்டங்கள்,  பறவைகள் கூட்டமாக செல்வது போல் பார்வையாளர்களை கவர்கின்றன. 

இந்த அதிதீவிர சாகச விளையாட்டெல்லாம்  நமக்கு சரிபட்டு வருமா என யோசித்துக்கொண்டிருந்தவர்களையெல்லாம் ,ஆங்காங்கே  உருவாகியுள்ள சிறப்பு வகுப்புகள்
 களமாட வைக்கின்றன ..

 குளிர்பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணியாக  சாதாரணமாக செல்வோர் கூட, இந்த வகுப்பில் பயிற்சி பெற்று இவ்விளையாட்டை  ஒரு கை பார்க்கின்றனர்..
 







Next Story

மேலும் செய்திகள்