விளையாட்டு திருவிழா - 06.11.2018 : நெருப்புடன் கூட விளையாட முடியும்...!

விளையாட்டு திருவிழா - 06.11.2018 : கொளுந்துவிட்டு எரியும் பந்துடன் கால்பந்து
விளையாட்டு திருவிழா - 06.11.2018 : நெருப்புடன் கூட விளையாட முடியும்...!
x
விளையாட்டு திருவிழா - 06.11.2018

தீபாவளி அன்று நெருப்புடன் விளையாடும் குழந்தைகளை நாம் பார்த்திருப்போம்.. ஆனால் நெருப்பு பந்தால் கால்பந்து விளையாடுவதை நாம் பார்த்திருப்போமா,, இதோ உங்களுக்காக ..? 

அதாவது கொளுந்துவிட்டு எரியும் பந்துடன் கால்பந்து விளையாட்டு...
இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர்கள் தான் இந்த போட்டியை முதலில் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. தற்போது அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஏன் வட இந்தியாவிலும் ஒரு சில இடங்களில் விளையாடப்படுகிறது. 

இந்தோனேசியாவில், பெரும்பாலும் காய்ந்த தேங்காய்களையே கால்பந்தாக பயன்படுத்தப்படுகின்றன. இதற்காகவே தேங்காயை பல நாட்கள் காய வைத்து எடை முற்றிலும் குறைந்த பின்னர் அதனை கால்பந்தாக பயன்படுத்தி வருகின்றனர்.

இரவு நேரங்களிலும் கால்பந்து விளையாட நினைத்த இந்தோனேசிய இளைஞர்கள், காய்ந்த தேங்காய்களில், பெட்ரோல் ஊற்றி எரித்து, விளையாட தொடங்கினர். 

இரவு நேரங்களில், குடும்பத்தினர் ரசிகர்களாக சூழ்ந்திருக்க, பொழுதுபோக்கு விளையாட்டாய் விளையாடப்படுகிறது இந்த  Flaming soccer... இதனை காண, வெளிநாட்டில் இருந்தும் மக்கள் செல்வதுண்டு...

இந்த போட்டிக்கென பிரத்யேக விதிமுறைகள் கிடையாது. கால்பந்தாட்ட விதிமுறைகளே பின்பற்றப்படும்... ஒரு சில மாற்றங்கள் மட்டுமே இருக்கும். குறிப்பாக கால்பந்தாட்ட மைதானத்தை விட சிறிய மைதானத்தில் Flaming soccer நடைபெறும். கைகளால் பந்தை தொடலாம்... பவுல் வழங்கப்படமாட்டாது.. ஏன் கைகளால் பந்தை எடுத்துகொண்டும் ஓடலாம்... கால்பந்து போலவே அதிக கோல் அடிக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்...

அமெரிக்கா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில், நெருப்பு பற்றாத உடை, உடல் முழுக்க தீயில் இருந்து காக்கும் லோஷன்கள் என போதுமான பாதுகாப்பு அம்சங்களுடனே இந்த போட்டி நடக்கிறது...

ஆனால், இந்தோனேசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில், வீரர்கள் வெறும் கால்களுடனும், லுங்கி போன்ற பாதுகாப்பற்ற உடைகளுடனும் விளையாடி வருகின்றனர். இதனால், சில நேரங்களில், விபத்துகள் ஏற்படுவதும் உண்டு...

Flaming footballக்கு என்று பிரத்யேகமாக உலக போட்டிகள் வரும் ஆண்டுகளில் நடத்தப்படும் என அமெரிக்கா, இந்தோனேசியா உள்பட பல நாடுகள் கூறி வருகின்றன... அவ்வாறு உலக கோப்பை போட்டிகள் நடத்தப்படுமானால் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் மிகுந்த விளையாட்டாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை...

இறந்த குட்டியை அகபகரிக்கும் விளையாட்டு

தீவிரவாத அமைப்பான தாலிபான்களே தடை செய்யும் அளவிற்கு ஆபத்து நிறைந்த விளையாட்டு ஒன்று ஆப்கானிஸ்தானின் தேசிய விளையாட்டாக இருந்து வருகிறது...  தாலிபான்களே தடைப்போட்ட அளவிற்கு அப்படி என்ன அந்த விளையாட்டில் உள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்...

Buzkashi  ... இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் ஆடுகளை அபகரித்தல். இரு அணிகள், அணிக்கு பத்து குதிரைகள் மற்றும் பத்து வீரர்கள்... 70 கிலோ எடை கொண்ட தலையில்லாத ஆடு அல்லது கன்றுக்குட்டி மைதானத்தின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும்... 

விளையாட்டின் பிரதான விதியே, மைதானத்தின் மையத்தில் இருக்கும் அந்த இறைச்சியை குதிரையில் இருந்தபடியே கைப்பற்றி, மைதானத்தில் இருக்கும் தொட்டி ஒன்றில் நாமும் சேர்ந்து விழ வேண்டும்... 

கேட்பதை விட மிகவும் அபாயகரமானது இந்த விளையாட்டு... குதிரையில் இருந்தபடியே இறந்த உடலை கைப்பற்றுவது கடினம் என்றால், அதனை கைப்பற்றிய பின்னர் சுற்றி குதிரையுடன் வரும் வீரர்கள் சாட்டையால் அடித்து நிலைகுலைய வைப்பார்கள்...

அப்போது, குதிரை இறக்க நேரலாம்.. சில சமயம் வீரர்களும் கூட இறக்க நேரலாம். அசுர வேகத்தில் செல்லும் குதிரையை தாக்குவதால், குதிரை நிலை தடுமாறி வீரரை தூக்கி வீசுகிறது. இதில் , பல உயிரிழப்புகள் நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

பத்தாம் நூற்றாண்டில் இருந்தே துருக்கியில் இந்த விளையாட்டுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 13 ஆம் நூற்றாண்டில்  செங்கிஸ்கான் என்ற மன்னரால் ஆப்கானிஸ்தானின் தேசிய விளையாட்டானது இந்த பஸ்கஷி...

உலக நாடுகள் அனைத்தும் வியந்து பார்க்கும் அளவிற்கு ஆபத்தான இந்த விளையாட்டை வீர விளையாட்டாக விளையாடி வந்தனர் ஆப்கானிஸ்தான் மக்கள்.
பாதுகாப்பு அம்சங்கள் ஏதும் இன்றி வீரர்கள் போட்டியில் பங்கேற்பதால், பலர் உயிரிழந்தனர். ஆனாலும் விளையாட்டு தடை செய்த பாடில்லை... 

ஆப்கானிஸ்தான் முழுமையாக தாலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் வந்தபோது, இந்த போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த போட்டிகள் மறைமுகமாக நடத்தப்பட்டு வருகின்றன.

எனினும் இன்றளவும் ஆப்கானிஸ்தானில், திருமண நிகழ்ச்சிகள், மசூதிகளில் திருவிழா காலங்களில்  இந்த போட்டிகள் நடைபெறுவதாக கூறுகின்றனர். பீட்டர் மெக்டொனால்டு, சில்வர்ஸ்டெர் ஸ்டேலொன் நடித்த ராம்போ போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களிலும் Buzkashi  போட்டிகளை காணமுடியும்.

பெண்களை ஈர்க்கும் "ஆக்வா ஜூம்பா" உடற்பயிற்சி

பெண்கள, குழந்தைகளை ஆட்டம் போட வைக்கும் உடற்பயிற்சி முறை தான் AQUA ZUMBA.. மழையால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள இந்த நிலையில், நீங்களும் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்,, எப்படி என்று நீங்களே பாருங்கள்? 

AQUA ZUMBA.. பெண்கள், குழந்தைகளை ஈர்க்கும் புதிய உடற்பயிற்சி முறை தான் இந்த AQUA ZUMBA..

தரையில் ஆடும்  ஜூம்பா நடனத்தை, தண்ணீரில் ஜாலியாக ஆடி பாடுவது தான் இதன் சிறப்பம்சமே..

தண்ணீரில் கை, கால்களை அசைப்பதே சற்று கடினம்.. ஆனால் எப்படி நடனமாடுவது என்று நீங்கள் கேட்கலாம்..??  நீச்சல் குளத்திற்கு வெளியே நிற்கும் பயிற்சியாளர், துள்ளல் போடும் இசைக்கு ஏற்ப நடனமாடுவார். அதனை தண்ணீரில் நிற்பவர்கள் ஆட முயற்சி செய்தாலே போதும்..

புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடுவது தான் இந்த பயிற்சி..

இதனை மேற்கொள்வதால், மன அழுத்தம் குறைவதுடன்,உடல் எடையும் குறைந்து, உடல் வழுவை மேம்படுத்தும்.

தண்ணீர் இடுப்பு அளவு தான் இருக்கும் என்பதால், இந்த பயிற்சியை மேறகொள்வதில் எந்த ஆபத்தும் இல்லை..  60 நிமிடம் இந்த பயிற்சியை செய்தாலே 350 கலோரி குறைந்துவிடும்.  

இந்த பயிற்சியின் விசஷமே நேரம் போவதே தெரியாது. இதனால் வெளிநாட்டில் சேர்ந்தவர்கள், தங்களது நண்பர்களுடன் குழுவாக இந்த பயிற்சியை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 







Next Story

மேலும் செய்திகள்