விளையாட்டு திருவிழா - (08.10.2018) - பானிபூரி விற்று கிரிக்கெட் வீரரான யாஷாவி - U-19 இந்திய கிரிக்கெட் அணியில் ஜொலித்தவர்
பதிவு : அக்டோபர் 08, 2018, 09:02 PM
விளையாட்டு திருவிழா - (08.10.2018) - வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்து தற்போது வெற்றிப் பாதைக்கு வந்த 16 வயது கிரிக்கெட் வீரர்
உத்தரப் பிரதேச மாநிலம் BHADOHI கிராமத்தை சேர்ந்த YASHASVI..ஏழ்மை காரணமாக 11 வயதில் மும்பைக்கு சென்றார். மாமாவின் பால் பண்ணையில் பணிபுரிந்த போது தான் கிரிக்கெட் வாழ்க்கைக்கு அவர் அடியேடுத்து வைத்தார். காலையில் பயிற்சி மேற்கொள்ள சென்றதால், மாமா அவரை பணியிலிருந்து துரத்தி விட்டார். இதனால் மும்பையில் யாருமே இல்லாத யாசாஸ்வி, ஒரு உள்ளூர் அணியில் சேர்ந்தார். அங்கு YASHASVI JAISWAL  தற்காலிக டெண்ட் அமைக்கப்பட்டு, அதில் தங்க வைக்கப்பட்டார். அதில் தங்கி கிரிக்கெட் விளையாடும் போது, சக வீரர்களிடம் அடி வாங்குவது,  வீரர்களுக்கு சமைப்பது என பல்வேறு பிரச்சனைகளை YASHASVI JAISWAL  சந்தித்தார். பணப் பிரச்சனையை சமாளிக்க ஜாய்ஸ்வால்,  பாணி பூரி விற்றுள்ளார்.  12 வயதில் வாழ்க்கையை வெறுத்த போன தருணத்தில், கிரிக்கெட் பயிற்சியாளர் JWALA SINGH அவரை சந்தித்தார். இந்த சந்திப்பு அவரின் வாழ்க்கையே மாற்றியது. உள்ளூர் கிரிக்கெட்டில்  JAISWAL ஐ பயிற்சியாளர் விளையாட வைத்தார். அப்போது மூன்று ஆண்டுகளில் ஜாய்ஸ்வால், 51 சதம் விளாசினார்.  ஜெய்ஸ்வாலுக்கு விளையாட பேட் இல்லாத தருணத்தில் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர், சச்சின் டெண்டுல்கர் அவருக்கு பேட் வாங்கி தந்துள்ளனர். தனது திறமையால், 19 வயதுக்குட்பட்டவருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் ஜாய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார். ஆசிய கோப்பையில் ஜாய்ஸ்வால் 318 ரன்களை விளாசி தொடர் நாயகன் விருதை வென்றார். வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களை சந்தித்தாலும்,  நம்பிக்கையும் விடாமுயற்சியையும் விடாமல் தொடர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதே ஜாய்ஸ்வால் நமக்கு கூறும் வாழ்க்கை பாடம்.

இளையோருக்கான ஒலிம்பிக் போட்டி - தொடரும் ரஷ்ய வீரர்களின் ஆதிக்கம்

இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினாவின் பியோனஸ் ஐரிஸ் நகரில் நடைபெற்றது.  உலகம் முழுவதுமிலிருந்து 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். 10மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ரஷ்ய வீரர் GRIGORII தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்தப் பிரிவில் இந்தியாவை சேர்ந்த  துஷர் மானே வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதே போன்று BMX சைக்கிள் பந்தயத்தில் ரஷ்யாவின் கையே ஒங்கி இருந்தது. வேகத்தடை போல் அமைக்கப்பட்ட சாலையை கடக்கும் இந்தப் பந்தயத்தில் ரஷ்ய அணி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. மகளிருக்கான டிரையத்லான் பிரிவில் தென்னாப்பிரிக்க வீராங்கனை AMBER  தங்கம் வென்றார். டென்மார்க் வீராங்கனையை விட 27 விநாடிகள் முன்னிலை பெற்று அம்பர் முதலிடத்தை பிடித்தார். கத்திச்சண்டை மகளிர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை YUKA தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ஆடவர் பிரிவில் தென் கொரிய வீரரை வீழ்த்தி ஹங்கேரியின் RABB தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ஜூடோ விளையாட்டில் இந்திய வீராங்கணை தேவி வெள்ளி வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க பட்டியல் இரண்டாக உயர்ந்துள்ளது. 

பெண்களை ஈர்க்கும் "ஆக்வா ஜூம்பா" உடற்பயிற்சி

AQUA ZUMBA.. பெண்கள், குழந்தைகளை ஈர்க்கும் புதிய உடற்பயிற்சி முறை தான் இந்த AQUA ZUMBA. தரையில் ஆடும்  ஜூம்பா நடனத்தை, தண்ணீரில் ஜாலியாக ஆடி பாடுவது தான் இதன் சிறப்பம்சமே. தண்ணீரில் கை, கால்களை அசைப்பதே சற்று கடினம்.. ஆனால் எப்படி நடனமாடுவது என்று நீங்கள் கேட்கலாம்..??  நீச்சல் குளத்திற்கு வெளியே நிற்கும் பயிற்சியாளர், துள்ளல் போடும் இசைக்கு ஏற்ப நடனமாடுவார். அதனை தண்ணீரில் நிற்பவர்கள் ஆட முயற்சி செய்தாலே போதும். புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடுவது தான் இந்த பயிற்சி. இதனை மேற்கொள்வதால், மன அழுத்தம் குறைவதுடன்,உடல் எடையும் குறைந்து, உடல் வழுவை மேம்படுத்தும். தண்ணீர் இடுப்பு அளவு தான் இருக்கும் என்பதால், இந்த பயிற்சியை மேறகொள்வதில் எந்த ஆபத்தும் இல்லை. 60 நிமிடம் இந்த பயிற்சியை செய்தாலே 350 கலோரி குறைந்துவிடும். இந்த பயிற்சியின் விசஷமே நேரம் போவதே தெரியாது. இதனால் வெளிநாட்டில் சேர்ந்தவர்கள், தங்களது நண்பர்களுடன் குழுவாக இந்த பயிற்சியை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

சிபாக் டக்ரா விளையாட்டு என்றால் என்ன?

கால்களை கொண்டு வாலிபால் போலவே ஆடும் ஒரு விளையாட்டை பற்றிய சிறு தொகுப்பை தற்போது காணலாம்.வாலிபாலையும் புட் பாலையும் சேர்த்து விளையாடும் ஓர் வினோத விளையாட்டு தான்  இந்த சேபாக் டக்ராவ் (Sepak takraw). மலேசியா, தாய்லாந்து, இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் மிகவும் பிரபலமாக விளையாடப்படுகிறது. இந்த விளையாட்டிற்கான உலக கோப்பை போட்டிகள் நடத்தி வந்த நிலையில், வருகிற 2022 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்த போட்டியை சேர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செபாக் டக்ராவ் போட்டியின் ஆடுகளம் கிட்டத்தட்ட இறகு பந்து ஆடுகளம் போலவே இருக்கும். மூன்று பேர், இரண்டு பேர் மற்றும் குழு என பல பிரிவுகளில் போட்டி நடத்தப்படும். வாலிபால் போலவே நடுவில் வலை கட்டப்பட்டிருக்கும் , அதன்மீது  உடல் பாகங்கள் பட்டால் அது பவுலாக கருதப்படும்.வாலிபாலில் ஒரு வீரர் பந்தை ஒரு முறை தொட்டபின், தொடர்ச்சியாக மறுமுறை தொட்டால் பவுலாக கருப்படும். ஆனால், இந்த போட்டியில் ஒரே வீரர் இரு முறை பந்தை தாக்க முடியும். கால்கள், மார்பு, தலை போன்ற உடல் பாகங்களில் மட்டுமே பந்தை தாக்க வேண்டும். மற்ற பாகங்களில் பந்து பட்டால் பவுலாக கருதப்படும். வாலிபால் போலவே பந்தை அடுத்த அணிக்கு தள்ளுவதற்கு மூன்று அவகாசங்கள் கொடுக்கப்படும். மூன்று செட்டுகளாக நடத்தப்படும், இரண்டு செட்களில் முன்னிலை பெறும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். செபாக் டக்ராவ் போட்டியில் உலக அளவில் இந்தியா ஆயிரத்து 315 புள்ளிகளுடன் 9 வது இடத்தில் உள்ளது.  பெண்கள் பிரிவில் ஆயிரத்து 40 புள்ளிகளுடன் 7 வது இடத்தில் உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் இப்போட்டியை சேர்க்கும் பட்சத்தில் இந்தியா கண்டிப்பாக பதக்கங்களை வெல்லும் என விளையாட்டு ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

பிற நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி

விளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்

93 views

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி?

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை

70 views

விளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்

விளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்

38 views

விளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி?

விளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி

36 views

விளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்

விளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்

27 views

விளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை

விளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.