விளையாட்டு திருவிழா - 21.09.2018 - ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தை பந்தாடியது ஆப்கான்

விளையாட்டு திருவிழா - 21.09.2018 - ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேச அணி ரன் சேர்க்க தடுமாற்றம்..
விளையாட்டு திருவிழா - 21.09.2018 - ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தை பந்தாடியது ஆப்கான்
x
விளையாட்டு திருவிழா - 21.09.2018 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தை பந்தாடியது ஆப்கான் 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேசமும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.வங்கதேச அணியின் ரஹிம், ரஹ்மான் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது. முகமது ஷாசாத் 37 ரன்களும்,  SHAIDI அரைசதம் எடுத்தனர். ஆனால் மற்ற ஆப்கானிஸ்தான் விரர்கள் அடுத்தடுது ஆட்டமிழக்க 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து திணறியது. இறுதியில் களமிறங்கிய ரஷித் கான் 32 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 255 ரன்கள் சேர்த்தது. 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிக்கரமாக அமைந்தது. ஆப்கான் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வங்கதேச அணியில் ஷகிபுல் ஹசன் அதிகபட்சமாக 32 ரன்களும், முகமதுல்லா 27 ரன்களும், ஹூசைன் 26 ரன்களும் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேச அணி 119 ரன்களுக்கு சுருண்டது. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேச அணி ரன் சேர்க்க தடுமாற்றம்..

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று இன்று முதல் தொடங்குகிறதுமுதல் ஆட்டத்தில் இந்தியாவும், வங்கதேசமும் விளையாடி வருகிறதுஆப்கானிஸ்தானை எதிர்கொண்ட மறுநாளே வங்கதேசம் ஓய்வின்றி விளையாடுகிறது. ஆப்கானிஸ்தானிடம் நேற்று அடைந்த படுதோல்வியிம் வங்கதேசத்தை பாதிக்கும். இருப்பினும் நேற்றை ஆட்டத்தில் ரஹம், ரஹ்மான் இல்லாமல் தான் வங்கதேசம் விளையாடியது.இந்திய அணியும் காயம் காரணமா பாதிக்கப்பட்டு இருக்கு. ஹர்திக் பாண்டியா இல்லை. இதனை இந்தியா எவ்வாறு கையாளப்போகிறது என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து உள்ளனர். கடந்த 2015 ஆண்டு முதல் வங்கதேசத்திடம் இந்தியா வீழ்ந்ததில்லை. ஆனால் வங்கதேசம் இந்தியாவுக்கு கடும் போட்டியை அளித்து வருவதையும் தவறவில்லை. 2016ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றதும் மறக்க முடியாது. வங்கதேச ரசிகர்கள் செய்யும் சேட்டையும், இந்திய ரசிகர்களை கடுப்பு அடைய செய்யும்.சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியோடு 3 போட்டிகளில் விளையாடும். அதனால் வெற்றியுடன் சூப்பர் 4 சுற்றை தொடக்க இந்தியா ஆயத்தமாகி வருகிறது. 

இந்தியா Vs பாகிஸ்தான் மீண்டும் மோதுகிறது : இந்தியாவுக்கு பதிலடி தருமா பாகிஸ்தான்?

சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும்  ஆசிய கோப்பை போட்டியில் விளையாடியது.ஆனால் தற்போது 4 நாட்கள் இடைவேளியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் மோதுகிறது. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு டபுள் சந்தோசமாகி விட்டது. லீக் சுற்றில் இந்தியாவிடம் பாகிஸ்தான் படுதோல்வியை தழுவியது. இதனால் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகளை அந்த அணியின் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். கோலி இல்லாத அணியை கூட பாகிஸ்தானால் சமாளிக்க முடிய வில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், லீக் சுற்றில் அடைந்த தோல்விக்கு பழித்தீர்க்கும் விதமாக பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது. இந்தியாவுக்கு எதிராக தாங்கள் செய்த தவறை பட்டியலிட்டு திருத்த முயற்சி செய்வோம் என்று பாகிஸ்தான் கேப்டன் SARFARAZ  தெரிவித்துள்ளார். இந்திய அணியோ பாகிஸ்தான் வீரர்களை கட்டுப்படுத்த ஸ்ட்ம்பை நோக்கி பந்துவீசினர். இந்த யுத்தியை உடைக்க பாகிஸ்தானும் பயிற்சி எடுத்து இருப்பார்கள்.  இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா, இல்லை பாகிஸ்தான் பதிலடி தருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

கிரிக்கெட் போட்டியால் ஏற்பட்ட நட்பு இந்திய ரசிகருக்கு உதவி செய்த பாக். ரசிகர் விமான டிக்கெட், தங்கும் செலவை ஏற்றார்

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் என்றால் , ஒரு போர் போல ரசிகர்கள் பார்க்கும் இந்த கால கட்டத்தில் தான், இந்திய ரசிகரின் பயண செலவை பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் ஏற்றுள்ளார். சுதிர் குமார் சௌத்ரி ...  இந்தியா விளையாடும் அனைத்து கிரிக்கெட் போட்டியிலும் இவரை  நீங்கள் பார்த்திருக்கலாம்..மூவர்ண கொடியை உடல் முழுவதும் பூசி கொண்டு, MISS U SACHIN TENDULKAR என்ற வாசகத்துடன் மைதானத்தில் வலம் வந்து பிரபலமானவர்.  சச்சின் கிரிக்கெட் ஆடும் வரை இவருக்கு போட்டிக்கான டிக்கெட் கிடைத்துவிடும்.  இந்த நிலையில், துபாயில் நடைபெறும் ஆசிய போட்டியை பார்ப்பதற்காக தனது பைக்கை 35 ஆயிரம் ரூபாய்க்கு  விற்றுள்ளார். ஆனால் போதிய பணம் அவருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான், பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் முகமது பஷிர் சுதிருக்கு போன் செய்து, துபாய்க்கு வருகிறாயா என்று கேட்டுள்ளார். தம்மிடம் பணம் இல்லை என்று சுதிர் சொன்ன உடன், விமான டிக்கெட் செலவையும், தங்கும் செலவையும் தாம் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார் பஷீர்.. பஷீரின் உதவியால் தற்போது சுதிர், துபாய்க்கு வந்துள்ளார். சுதிர் எனது சகோதரர் போலவும், சுதிர் இல்லாமல் கிரிக்கெட் போட்டியை பார்த்தால், அது நன்றாக இருக்காது என்றும் தோழமையுடன் கூறுகிறார் பாகிஸ்தான் ரசிகர் பஷிர்.. கிரிக்கெட்டிற்காக இரு அணி ரசிகர்களும் அடித்து கொள்ளும் நிலையில், விளையாட்டை நட்பின்பாலமாக அமைப்பதற்கு சுதிரும், பஷிரும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.


Next Story

மேலும் செய்திகள்