விளையாட்டு திருவிழா - 18.09.2018 - இந்தியாவை சமாளிக்குமா கத்துக்குட்டி ஹாங்காங்?

தெறிக்க விட தயாராகும் ரோஹித், தோனி அறிமுக வீரராக கலில் அகமதுக்கு வாய்ப்பு
விளையாட்டு திருவிழா - 18.09.2018 - இந்தியாவை சமாளிக்குமா கத்துக்குட்டி ஹாங்காங்?
x
இந்தியாவை சமாளிக்குமா கத்துக்குட்டி ஹாங்காங்? - தெறிக்க விட தயாராகும் ரோஹித், தோனி அறிமுக வீரராக கலில் அகமதுக்கு வாய்ப்பு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, தனது முதல் லீக் ஆட்டத்தில் ஹாங்காங்குடன் விளையாடிக்கிட்டு இருக்கு.இங்கிலந்து டெஸ்ட் தொடர் முடிந்து சில நாட்களே ஆன நிலையில், ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா விளையாடுகிறது. தற்போது உள்ள இந்திய அணியில் தோனி மட்டுமே துபாயில் ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். வேறு எந்த வீரரும் துபாய் மண்ணில் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடியதில்லை. இது இந்திய அணிக்கு பாதகமாக கருதப்படுது. இருந்தாலும், ஐ.பி.எல். போட்டியில் துபாயில் விளையாடிய அனுபவம் கைக்கொடுக்கும்னு நம்பப்படுது. இந்திய அணியில் தாம் எவ்வளவு முக்கியமான வீரர் என்பதை நிரூபிக்கும் பொருட்டில் களமிறங்கியுள்ள தோனி, போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.இதே போல் ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடரில் இந்தியாவுக்கு முதல் முறையாக ரோஹித் சர்மா தலைமை  தாங்குகிறார். ஹாங்காங்க்கு எதிராக இந்தியா எளிதில் வெற்றி பெற்றாலும், ஓய்வின்றி மறுநாளே பாகிஸ்தானுடன் இந்தியா மோதுகிறது.  இதனால் இந்தப் போட்டியை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிக்க இந்திய வீரர்கள் டிரை பண்ணுவாங்க. இதுவரை இந்தியாவும், ஹாங்காங்கும் ஒரு முறை மோதி இருக்கு.. அதில் இந்தியா 256 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கு. 

ஆசிய கோப்பையிலிருந்து இலங்கை வெளியேற்றம் அதிர்ச்சி வைத்தியம் அளித்த ஆப்கான் இலங்கை செய்த தவறுகள் என்ன?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியது.  முதல் ஆட்டத்தில் வங்கதேசத்திடம் படுதோல்வியை அடைந்த இலங்கை  அணி,  வாழ்வா சாவா ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதியது.இதில் யாருமே எதிர்பாராத வகையில் இலங்கை அணி படுதோல்வியை தழுவியது.  இலங்கை அணி, கடந்த சில மாதங்களாவே பல்வேறு தொடர்களில் தோல்வியை தழுவி மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் திறமையான வீரர்களாக கருதப்படும் இலங்கை அணியின் இளம் வீரர்கள் ரன் குவிக்க திணறி வருகின்றனர்.மேலும், இலங்கை அணியினர் நேற்று தேவையில்லாத ரன் அவுட்டாகி தங்களது விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். மேத்தீயூஸை மட்டுமே இலங்கை அணி நம்பி இருப்பது, அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் பலவீனமாக அணியாக கருதப்பட்ட வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளிடம் இலங்கை தோல்வியை தழுவியுள்ளது, அந்நாட்டு ரசிகர்களை மனவேதனை அடைய செய்துள்ளது.  இலங்கை அணியின் பயிற்சியாளரை மாற்றுவது இல்லை, சங்கக்காரா உள்ளிட்ட வீரர்களை இலங்கை அணியின் ஆலோசகராக நியமிப்பதன் மூலம், இலங்கை அணி வெற்றி பாதைக்கு திரும்ப முடியும். அதே சமயம், ஆப்கானிஸ்தான் அணியினர் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தினால், பலம் வாய்ந்த அணியாக ஆப்கான் வலம் வரும். 

மறக்க முடியாத அதிரடி ஆட்டங்கள் - 2012 ஆசிய கோப்பை  இந்தியா Vs பாகிஸ்தான்

2012ஆம் ஆண்டு டாக்காவில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் யாராலும் மறக்க முடியாது அதுக்கு காரணம்  விராட் கோலி தான். டாக்காவில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் அதிரடியான அட்டத்தை வெளிப்படுத்தினாங்க. முகமது ஹபீஸ், ஜம்சத் ஜோடியை பிரிகக மடியாமல் இந்திய வீரர்கள் திணறுனாங்க. இருவரும் அடுத்தடுத்து சதம் விளாச, முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 224 ரன்கள் சேர்த்தது.இதனைத் தொடர்ந்து அந்த அணியின் அனுபவ வீரர் யூனிஸ் கான், அரைசதம் விளாசினார். இருப்பினும் அஃபிரிடி உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்தது.330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஆட்டத்தின் 2வது பந்திலே கம்பீர் டக் அவுட்டாக இந்தியாவுக்கு அதிர்ச்சிகரமாக தொடக்காக அமைந்தது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த டெண்டுல்கர், கோலி ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தாங்க.. டெண்டுல்கர் அரைசதம் விளாசி ஆட்டமிழக்க, தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி சதம் விளாசினார். விராட் கோலிக்கு கம்பெனி கொடுத்த ரோஹித் சர்மாவும் அரைசதம் அடிச்சாரு. ஆனால் விராட் கோலி காரில் கீர் மாற்றுவது ரன் குவிக்கும் வேகத்தை அதிகப்படுத்தினார். விராட் கோலியை கட்டுப்படுத்த பாகிஸ்தான் எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை. தொடர்ந்து கோலி 183 ரன்கள் விளாச, இந்திய அணி 13 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றியை உறுதி செய்தது. 

Next Story

மேலும் செய்திகள்