விளையாட்டு திருவிழா - 07.09.2018 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்?
பதிவு : செப்டம்பர் 07, 2018, 08:37 PM
விளையாட்டு திருவிழா - 07.09.2018 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி : நாளை, செரீனா - ஓசாகா பலப்பரீட்சை
விளையாட்டு திருவிழா - 07.09.2018
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி, இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது.மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில், முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்சுடன் லாத்வியா வீராங்கனை ANASTASIJA SEVASTOVA மோதினார்.பரபரப்பான இந்த ஆட்டத்தில் செரீனா 6 க்கு 3 ,6க்கு பூஜ்யம் என்ற நேர் செட் கணக்கில் ANASTASIJA SEVASTOVA  - வை எளிதில் வீழ்த்தி,  இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு அரை இறுதி போட்டியில், அமெரிக்காவின் மாடிசன் கெய்சும், ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகாவும் மோதினர்.இந்த போட்டியில், நவோமி ஓசாகா 6க்கு 2 , 6 க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். எனவே, இறுதி ஆட்டத்தில் நவோமி ஓசாகா, 9 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செரீனா வில்லியம்சை எதிர்கொள்கிறார். அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்று வரை முன்னேறிய முதல் ஜப்பான் வீராங்கனை என்ற பெருமையை ஒசாகா பெற்றுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.