மலை ரயிலில் ஒரு பயணம்

மலை ரயிலில் ஒரு பயணம்
மலை ரயிலில் ஒரு பயணம்
x
மலை ரயிலில் ஒரு பயணம் 
மேற்கு தொடர்ச்சி மலைகளும், கிழக்கு தொடர்ச்சி மலைகளும் சங்கமிக்கும் ரம்மியமான சமவெளி அதுகடல் மட்டத்தில் இருந்து சுமார் 7347 அடி உயரத்தில் இயற்கையின் கொடையாக விளங்குகிறது .கார் மேகங்கள் தொட்டுச் செல்லும் கரடுமுரடான மலைகள்... பசுமை போர்த்திய பள்ளத்தாக்குகள்... வானுயர்ந்த மரங்கள்... முத்து விரித்தது போன்ற பனிபோர்த்திய புல்வெளிகள்... வெள்ளியை உருக்கி கொட்டியதை போன்ற நீரூற்றுகள்... என இயற்கையின் பல வண்ணங்களை அழகுற ஆபரணமாக சூடிக்கொண்டுள்ளது.. இதில் கிரீடமாக நம் கண்ணுக்கு தெரிவது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்திருக்கும் தேயிலை தோட்டங்கள்..12 ஆண்டுக்கு ஒருமுறை நீலகுறிஞ்சி மலர்களால் வானை போர்வையாக போர்த்திய ஓவியமாகிறது குளு குளு சூழலை கொண்ட ஊட்டி இன்று சிறந்த மலைவாழ்விடமாகி இருக்கிறது. இயற்கையின் அழகால் அனைவரையும் உள்ளிழுக்கும் இந்த ஊட்டியின் உருவாக்கம் தெரிய வேண்டுமென்றால், வரலாற்றில் சுமார் 200 ஆண்டுகள் பின் செல்ல வேண்டும்.....இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலகட்டம் அது.... சென்னை மாகாணத்தில் சமவெளியில் வெயில் சுட்டெரித்தது. வெப்பத்தை தாங்க முடியாமல் வதங்கிய ஆங்கிலேயர்கள்; தங்கள் நாட்டு சீதோஷ்ண நிலை கொண்ட பிரதேசத்தை அடையாளம் கண்டுவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில் அவர்களுடைய தேடல்  இருந்ததுஇன்றைய ஊட்டியின் வரலாற்றில் சல்லிவன் என்ற பெயரை மறைத்துவிட முடியாதுகோயம்பத்தூர் மாவட்ட கலெக்டராக இருந்த ஆங்கிலேயரான ஜான் சல்லிவன் தான், 1819-ம் ஆண்டில் ஊட்டியை கண்டறிந்தார்.உதகையின் எழில் கொஞ்சும் இயற்கையை செவிகுளிர கேட்டதும், அதைநோக்கிய பயணத்தை தொடங்கிவிட்டார் சோலை காடுகள், புல்வெளிகள், முட்புதர்கள், நீர்வீழ்ச்சிகளை கடந்து ஊட்டியை அடைந்து சமவெளியை கண்ட அவருக்கு அங்கிருந்த காலநிலை மிகவும் பிடித்துப்போனதுஅன்றே ஊட்டி ஆங்கிலேயர்களின் கோடை வாசஸ்தலமாக தொடங்கியதுஊட்டி செல்வதற்கு சாலை கட்டமைப்பு பணிகள் குன்னூர் கோத்தக்கிரி வழியாக தொடங்கியதுஅதுவரையில் பழங்குடியினார் மட்டும் இருந்த காட்டில், ஆங்கிலேய பாரம்பரிய கட்டிடங்கள் எழ தொடங்கின
படிப்படியாக ஆங்கிலேயர்களின் வருகையும் அதிகரித்தது
1827 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் கோடை தலைநகரமாக அறிவிக்கப்பட்டது ஊட்டியின் இயற்கை எழிலை உலகத்திற்கு அடையாளம் காட்டிய சல்லிவன் 1830 வரையில் அதனுடைய மேம்பாட்டுக்கும் பணியாற்ற தவறவில்லை குளுமையின் சொர்க்கபுரியான ஊட்டியின் அழகை நாம் தரிசிக்க ரதமாக ஊர்ந்து செல்கிறதுமேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையில் நீலகிரி மலையின் பாறைகளில் நீலநிற பாம்பை போன்று வளைந்து நெளிந்தும், பாலங்களில் ஊர்ந்தும், குகைகளை கடந்தும் ஏறியிறங்குகிறது
மலைகளின் அரசி ஊட்டி என்றால் இந்திய ரயில்வேவின் அரசி இந்த மலை ரயில் இந்த ரயிலில் சென்று பசுமையான மரங்கள், கேத்தி பள்ளத்தாக்கு, குகைகள், சிறு நீர்வீழ்ச்சிக்கள், சிற்றோடைகள், வன விலங்குகள், வண்ண பூக்களை கண்பது மிகவும் இனிமையான அனுபவம்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரையும் குதூகலிக்கச் செய்கிறது இந்த டாய் ட்ரெய்ன் என்னும் மலை ரயில்....ஆம் நீலம்.... பழுப்பு நிறம் கொண்டு இருபுறமும் பெரிய ஜன்னல்களை கொண்ட மரக்கட்டையால் ஆன மலை ரயில் ஒரு விளையாட்டு ரயிலை போன்றுதான் காட்சியளிக்கிறதுசுற்றுலா பயணிகள் மத்தியில் நீங்கா இடம்பிடித்திருக்கும் மலை ரயில் அவ்வளவு எளிமையாக அமைந்துவிடவில்லை.. அதுவும் நீண்ட வரலாறை சுமந்து செல்கிறது...இந்தியாவில் பயணத்திற்கும், சரக்குகளை ஏற்றிச் செல்லவும் ஆங்கிலேயர்கள் ரயில்களை பயன்படுத்த தொடங்கிய காலக்கட்டம் அது 
 ஊட்டிக்கும் ரயில் பயணத்தை தொடங்குவது குறித்து யோசித்தனர் 
ஆனால் இயற்கையை வசப்படுத்தி மலைக்கு ரயிலை இயக்குவதற்கு தொழில்நுட்ப சிக்கல் தடையாக இருந்ததுஅப்போதுதான் சுவிஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மலையேறும் விதமான புதிய பல்சட்ட ரயில் தண்டவாள தொழில்நுட்பம் ஆங்கிலேயர்களுக்கு உதவியது வழக்கமான தண்டவாளங்களில் இருந்து மாறுப்பட்டது இந்த பல்சட்ட தண்டவாளம் ரயில் தண்டவாள அமைப்புக்கு நடுவில் பல்சட்டங்கள் இருக்கும் 
இதில் ஏறிச் செல்லும் வகையில் பல்சக்கர நீராவி ரயில் எஞ்சினை சுவிஸ் நாட்டு பொறியாளர் ரிக்கன்பாக் கண்டுபிடித்தார்.... 
 எளிதாக சொல்லப்போனால் ஏணியின் மீது ஏறுவதுதான் இதற்கான பார்முலா
பற்சட்டங்களை பற்றிக்கொண்டு ஏறும் நீராவி எஞ்சின், ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ற வகையில் ரயிலை உந்தி தள்ளவும் செய்கிறது, வேகத்தினை கட்டுப்படுத்தவும் செய்கிறது....இது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் இருந்தது இதற்கிடையில் 1862 ஆம் ஆண்டு சென்னை-கோயம்புத்தூர்-கோழிக்கோடு ரயில் பாதையும் 1873 ஆம் ஆண்டில் போத்தனூர்-மேட்டுப்பாளையம் ரயில் பாதையும் திறக்கப்பட்டது.
இதனால் நீலகிரி மலைக்கு செல்வதற்கு மேட்டுப்பாளையம் மலையடிவார இடமானது.இதனையடுத்து மலை ரயிலுக்கான திட்டம் வேகமெடுக்க தொடங்கியதுமேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயிலை தொடங்க 25 லட்சம் ரூபாய் முதலீடாக கொண்டு நீலகிரி ரயில்வே கம்பெனி உருவாக்கப்பட்டது1891 ஆகஸ்ட்....  மெட்ராஸ் பிராந்திய ஆளுநர் பிரபு, தண்டவாளம் போடும் பணியை தொடங்கினார் பல்வேறு சறுக்கல்களை சந்தித்தும், விடாப்பிடியாக பாறைகளை பற்றி ஏறியது திட்டம்
பாறைகள் வெடிவைத்து உடைக்கப்பட்டு, மேலே ஏறுவதற்கு ஏதுவாக பன்படுத்தப்பட்டனமலைகளை குடைந்து பாலங்கள் அமைக்கப்பட்டன... தாழ்வான பகுதிகளையும்... நீர் ஓடைகளையும் கடக்க பாலங்கள் அமைக்கப்பட்டன....  திட்டமிடப்பட்டு சுமார் 40 ஆண்டுகால பணியால் மலை ரயில் உயிரோட்டம் பெற்று ஊர்ந்து செல்ல தொடங்கியது1899 ஜூன் 15 மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இடையில் பல்சக்கர ரயில் பாதை திறக்கப்பட்டது 



Next Story

மேலும் செய்திகள்