புதிய கல்வி கொள்கை குறித்த பிரதமர் மோடி உரை - தமிழில்...
பதிவு : ஆகஸ்ட் 01, 2020, 06:51 PM
மாற்றம் : ஆகஸ்ட் 01, 2020, 07:51 PM
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் நாட்டு மக்களிடம் பேசினார்.
சுயசார்புள்ள இந்தியாவை இளைஞர்கள்தான் உருவாக்கி வருகிறார்கள் பிரதமர் மோடி தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கை குறித்த விளக்கம் அளிக்கையில் இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவின் கனவையும், வருங்கால சந்ததியினரின் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டே புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

இந்தியாவின் கல்வித்திட்டம் புதுமையாகவும், நவீனமாகவும் இருக்க வேண்டும் என்பதே நோக்கம் என்றும், 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப  புதுமை, ஆராய்ச்சி, வளர்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம், தர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கடந்த நூற்றாண்டுகளில், சிறந்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களை உலகிற்கு வழங்கியுள்ளதாக தெரிவித்த பிரதமர், கல்வி, விளையாட்டுத்துறையில் உலகத்தரத்திற்கு நிகரான வசதிகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பல பட்டங்கள் பெற்றும் வேலைக்கு உதவவில்லை என்கிறபோது, 
நமது குறைகளை உணர வேண்டும் என்றும்,  பெற்றோர், உறவினர், நண்பர்கள் அனைவருக்குமாக வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட பாடங்களை படித்து வருவதாக சுட்டிக்காட்டிய அவர், மாணவர்களை வழி நடத்துவது தேசத்திற்கான முன்னேற்றமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

இளைஞர்கள் 3 விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், கல்வி, கேள்வி, தீர்மானித்தால் ஆகியவற்றில் சிறந்து விளங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கல்வி வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என்பதையே புதிய கல்விக்கொள்கை தெளிவுபடுத்துவதாக தெரிவித்தார்.

சங்கீதத்தையும், கணக்கையும் ஒன்றாகக் கற்றுக்கொள்ளும்போது  எண்ணங்கள் ஒருமுகமாகும் என்றும், சமுதாயம் எதிர்பார்ப்பதை இந்த கல்வித்திட்டம் தந்திருப்பதாகவும்  கூறினார்.

உயர்கல்வி படிக்க 50 சதவீத வாய்ப்பு உருவாகும் என்றும், அம்பேத்கர் கூறியபடி, கல்வி அனைவருக்கும் கிடைக்கும்படியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்தியா பல மொழிகளின் களஞ்சியம் என்று கூறிய அவர், அவற்றை கற்றுக்கொள்ள நம் வாழ்நாள் போதாது என்றும் தெரிவித்தார்.

தேசிய மொழியை கற்கும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது என்றும், மற்ற மொழிகளை கற்கும்போதுதான் இந்தியா வளம்பெறும் எனவும் மோடி கூறினார்.

தேசிய மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவம், மற்ற மொழிகளுக்கும் கொடுக்கப்படும் என்றும், சுயசார்புள்ள இந்தியாவை இளைஞர்கள்தான் உருவாக்கி வருகிறார்கள் என்றும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

பிற நிகழ்ச்சிகள்

(06/03/2021) வணக்கம் வாக்காளர்களே..!

(06/03/2021) வணக்கம் வாக்காளர்களே..!

56 views

(07/02/21)"ஊழலுக்கு தனி நீதிமன்றம்"- திமுகவின் தேர்தல் திட்டங்கள் | மு. க.ஸ்டாலின் -சிறப்பு நேர்காணல்

(07/02/21)"ஊழலுக்கு தனி நீதிமன்றம்"- திமுகவின் தேர்தல் திட்டங்கள் | மு. க.ஸ்டாலின் -சிறப்பு நேர்காணல்

20 views

(04/02/2021) “ஒரு நாள் நட்சத்திரம்” - கனிமொழி உடன் ஒரு நாள்

(04/02/2021) “ஒரு நாள் நட்சத்திரம்” - கனிமொழி உடன் ஒரு நாள்

14 views

அருள்நிதியின் புதிய பாதை - சிறப்பு பேட்டி

அருள்நிதியின் புதிய பாதை - சிறப்பு பேட்டி

24 views

மலை ரயிலில் ஒரு பயணம்

மலை ரயிலில் ஒரு பயணம்

53 views

பாலமேடு ஜல்லிக்கட்டு 2021 | Visuals of Palamedu Jallikattu 2021 | Thanthi TV

பாலமேடு ஜல்லிக்கட்டு 2021 | Visuals of Palamedu Jallikattu 2021 | Thanthi TV

57 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.