ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு

தன் மீதான சொத்து வழக்கை முறையான விதிகளைப் பின்பற்றாமல் சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து, ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு
x
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக் குவிப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும், அதனால் விசாரணையைத் தொடர வேண்டியதில்லை என்றும் கூறப்படிருந்தது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 3ம் தேதி, நீதிபதிகள் மாறுபட்ட  தீர்ப்பை அளித்தனர். சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டுமென நீதிபதி சத்திய நாராயணன் உத்தரவிட்டார். ஆனால்,  நீதிபதி ஹேமலதா, வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். இரு நீதிபதிகளிடையேயான மாறுபட்ட தீர்ப்பால் எம்.நிர்மல்குமார் 3வது  நீதிபதியாக  நியமிக்கப்பட்டு வழக்கை விசாரித்து வருகிறார். இந்நிலையில், தமக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை முறையான விதிகளை பின்பற்றாமல் சென்னை உயர்நீதிமன்ற விசாரிப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்