ட்ரம்ப்-க்கு விழுந்த பெரிய இடி.. அமெரிக்க தேர்தலில் தமிழ் வம்சாவளி? - பச்சைக்கொடி காட்டிய No.1 உலக பணக்காரர்

x

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட வேட்பாளராகக் களமிறங்கியுள்ள தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமிக்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது...

குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள விவேக் ராமசாமி, ட்ரம்பிற்கு மிகச்சிறந்த போட்டியாளராகக் கருதப்படுகிறார்... குடியரசுக் கட்சி சார்பில் யார் அதிபர் வேட்பாளராகக் களமிறங்குவார்கள் என்பது உள்கட்சி தேர்தலுக்குப் பிறகுதான் தெரிய வரும். இருப்பினும், விவேக் ராமசாமியின் துடுக்கான பேச்சும், அவரின் கொள்கைகளும், முன்வைக்கும் கருத்துக்களும் அவருக்கு ஆதரவைப் பெருக்கிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், மேலும் ஆதரவு சேர்க்கும் விதமாக, உலக பணக்காரர்களில் ஒருவரும், ட்விட்டரின் தலைவரும், ஸ்பேஸ் எக்சின் நிறுவனருமான எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் தனது ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக, விவேக் ராமசாமியை, "மிகவும் நம்பிக்கைக்குரிய வேட்பாளர்" என புகழாரம் சூட்டியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்