வாட்ஸ் அப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு | whatsapp | whatsapp status

x

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே 74 லட்சத்து 20 ஆயிரத்து 748 வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கணக்குகளில் ஏறத்தாழ 3.5 மில்லியன் பயனர்களிடமிருந்து எந்த அறிக்கையும் பெறப்படுவதற்கு முன்பே தடைசெய்யப்பட்டது.

வாட்ஸ் அப் செயலியின் மூலமாக மற்றொருவரிடம் பணம் பறித்தல், பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் உள்ளிட்டவைகள் காரணமாக கணக்குகள் தடை செய்யப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே லட்சக்கணக்கான கணக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பயனர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்