உக்ரைன்-ரஷ்யா போர் - மேலும் வலுவூட்ட ஆயுதங்கள் - அமெரிக்கா வெளியிட்ட லிஸ்ட்

x

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், போர் காரணமாக ஆயிரத்து 110 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாத நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் டோனட்ஸ்க் மாகாணம் கொஸ்டினிவ்கா நகரில் உள்ள சந்தை பகுதியில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 32 பேர் படுகாயமடைந்தனர்.

உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தி தொடர்பாளர் Karine Jean-Pierre, உக்ரைனுக்கான ராணுவ உதவி தொகுப்பில், ஏவுகணை ஏவுதல் அமைப்புகள், ஜாவ்லின் தொட்டி எதிர்ப்பு ஆயுதங்கள், ஆப்ராம்ஸ் டாங்கிகள் மற்றும் பிற ஆயுத அமைப்புகளும் அடங்கும் என தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்