உடைந்த இதயங்களுக்கு இசையால் இதம் அளிக்கும் நபர் - "இந்த இசை, இந்த நொடியை ரசிக்க வைக்கிறது"

x

உக்ரைன் நாட்டில், போர் காரணமாக சோகத்துடன் கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு, தனது இசையால், இசைக்கலைஞர் ஒருவர் இதம் அளிக்கிறார். ரஷ்யாவின் ஏவுகணைகள் கடந்த 19ம் தேதி தாக்கியதில், உக்ரைனின் ஒடெசா நகரம் பலத்த சேதம் அடைந்தது. இந்நிலையில், மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சத்துடனும், உடைமைகளை இழந்த சோகத்துடனும் ஏராளமானோர் உள்ளனர். இளைப்பாறுதலுக்காக கடற்கரைக்கு வரும் அவர்களுக்கு, தெரு இசை கலைஞர் ஒருவர், தனது இசையால் இதம் அளிக்கிறார். இந்த இசையானது எங்களை கடந்த கால சோகத்தில் இருந்தும், எதிர்காலத்தை பற்றிய பயத்திலிருந்தும் விடுவித்து, இந்த நொடியை ரசிக்க வைக்கிறது, என போரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்