ட்ரம்ப்பைத் துப்பாக்கியால் சுட்ட விவகாரம்.. வெளியான அதிர்ச்சி தகவல் | Donald Trump | Thanthitv

அமெரிக்க அதிபர் வேட்பாளர் ட்ரம்ப்பை படுகொலை செய்ய முயன்ற இளைஞர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் பென்சில்வேனியாவில் ட்ரம்ப் உரையாற்றிய பிரச்சாரக் கூட்டம் நடந்த தளத்தை ட்ரோன் மூலம் கண்காணித்துள்ளார்... சம்பவம் நடந்த பட்லர் நகரில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் வசித்த தாமஸ் க்ரூக்ஸ், தனியாகவே அனைத்து வேலைகளையும் செய்துள்ளார்.. ட்ரோனைப் பறக்க விட்டு தாமஸ் நோட்டமிட்டுள்ளார் எனும்போது, இது அமெரிக்க பாதுகாப்புத் துறையின் அலட்சியத்தைக் காட்டுகிறது... அவருக்குப் பின்னால் எந்த அரசியல் தொடர்புகளும் இருப்பதாகத் தெரியவில்லை. தாக்குதலுக்கு முன்னதாக தாமஸ், டிரம்ப், அதிபர் பைடன், ட்ரம்ப் பிரச்சார பேரணி மற்றும் வரவிருக்கும் அதிபர் தேர்தலின் தேதி குறித்து இணையத்தில் தேடி இருந்தது குறிப்பிடத்தக்கது...

X

Thanthi TV
www.thanthitv.com