காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-12-2023) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-12-2023) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
  • தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.... தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை....
  • உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா போராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி.... குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்பு ....
  • வெள்ள பாதிப்புகள் காரணமாக, தூத்துக்குடியில் வழக்கமான கொண்டாட்டங்கள் இன்றி களையிழந்த கிறிஸ்துமஸ் விழா.... பனிமயமாதா பேராலயத்தில் கூட்டு பிரார்த்தனைகளுக்கு மட்டுமே ஏற்பாடு...
  • கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, மின்னொளியில் ஜொலித்த சென்னை விமான நிலையம்.... கண்கவர் அலங்காரத்தை கண்டு ரசித்தபடி சென்ற பொதுமக்கள்.....
  • உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்..... வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி....
  • உடல் நலக்குறைவால் காலமான நகைச்சுவை நடிகர் போண்டாமணி... நாகல்கேணியில் உள்ள மின் மயானத்தில் தகனம்... திரையுலகினர் இறுதி அஞ்சலி...
  • பிரான்சில் 303 இந்தியர்களுடன் சிறை பிடிக்கப்பட்ட விமானம் நீதி விசாரணைக்கு பின் விடுவிப்பு... சட்ட விரோத குடியேற்றமா? என நீடிக்கும் சந்தேகம்...
  • ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக வெற்றி பெற்றது இந்திய மகளிர் அணி.... 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபாரம்....

Next Story

மேலும் செய்திகள்