Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-10-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-10-2023) | Morning Headlines | Thanthi TV
  • இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் பாதுகாப்பாக இருப்பதாக அங்குள்ள தமிழர்கள் தகவல்... இஸ்ரேல் போர்க்களத்தில் இருந்து தந்தி டிவி தரும் பிரத்யேக தகவல்...
  • இன்று இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்... பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஜோர்டானியர்கள் போராட்டம்... காசா மருத்துவமனை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, பைடனுடனான சந்திப்பை ரத்து செய்தார் பாலஸ்தீனிய தலைவ​ர் மஹ்மூத் அப்பாஸ்......
  • காசா நகரில் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்.... 500-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு..... தாக்குதல் குறித்து தங்களுக்கு தெரியாது என இஸ்ரேல் ராணுவம் மறுப்பு....
  • போதைப்பொருட்களை முழுமையாக ஒழிக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்... ஆட்சியர், காவல் அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்....
  • செங்கல்பட்டில் பல்வேறு இடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு.... அரசு மருத்துவமனை,மேம்பால பணிகள் மற்றும் சாலை பணிகளையும் பார்வையிட்டார்.... பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு...
  • தமிழக நலனுக்காகவும், சிறுபான்மையினர் உரிமைக்காகவும் போராடுவோம் என வலியுறுத்தி வரும் தேர்தலை சந்திப்போம்.... அதிமுக தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு....
  • தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளுக்கு இடம் கிடையாது என அதிமுக எம்பி தம்பிதுரை பேச்சு.... பா.ஜ.க.வை விட்டு தனித்து நிற்பதால் சிறுபான்மையினர் அதிக அளவில் அதிமுகவை ஆதரித்து வருவதாக, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பெருமிதம்...
  • உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நியூசிலாந்து - ஆப்கன் அணிகள் இன்று மோதல்... இங்கிலாந்து அணியை பந்தாடிய ஆப்கானிஸ்தான் நியூசிலாந்துக்கும் அதிர்ச்சி அளிக்குமா என எதிர்பார்ப்பு...

Next Story

மேலும் செய்திகள்