Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-10-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-10-2023) | Morning Headlines | Thanthi TV
  • பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது, தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ... காவிரி விவகாரம் குறித்து முக்கிய தீர்மானத்தை தாக்கல் செய்கிறார், முதல்வர் ஸ்டாலின்.....
  • காவிரி விவகாரத்தில் மனிதாபிமானம்இன்றி செயல்படுகிறது, கர்நாடக அரசு..... தமிழக முதல்வர் நேரடியாக பேச வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தல்....
  • பிரதமர் திட்டத்தில், சம்பா தாலடி நெற்பயிரை காப்பீடு செய்ய, நவம்பர் 15ம் தேதி கடைசிநாள்.... திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு....
  • தமிழகத்தில் ஒன்று முதல் 5 வகுப்பு வரை இன்று முதல் அரசுப் பள்ளிகள் திறப்பு.... காலாண்டு விடுமுறை முடிந்து, பள்ளி திரும்பும் மாணவர்கள்....
  • தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளில் மீண்டும் சோதனையை தொடங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள்... மணல் அள்ளிய விவரங்கள் குறித்து ஆய்வு...
  • மக்களவை தேர்தலில் பா.ஜ.க. - தி.மு.க. இடையே தான் போட்டி என அண்ணாமலை கூறுவது சிரிப்பு நடிகர் வடிவேலு பாணியில் உள்ளது... தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம்...
  • திமுக கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலில் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை கேட்போம்... முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி...
  • வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சியில் இன்று கனமழை பெய்யக்கூடும்... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில், நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதல்... ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில், மதியம் 2 மணிக்கு போட்டி தொடக்கம்...



Next Story

மேலும் செய்திகள்