உலகமே பார்த்து பதறிய போர்.. இஸ்ரேலுக்கு விடுத்த எச்சரிக்கை.. திடீர் திருப்பம்..

x

காசா போரில் தனது நிலைப்பாட்டை மாற்றாவிட்டால், போருக்கான உலகளாவிய ஆதரவை இழக்க நேரிடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு, அமெரிக்க அதிபர் பைடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்..

போருக்குப் பிறகு காசா எவ்வாறு நிர்வகிக்கப்படும் என்பதில் பைடனுக்கு கருத்து வேறுபாடு இருப்பதாக நெதன்யாகு தெரிவித்திருந்தார்.. இந்நிலையில், இஸ்ரேலுக்கு பலத்த ஆதரவை வழங்கி வந்த அமெரிக்க தலைவரே தற்போது நெதன்யாகுவை விமர்சித்திருப்பது போரில் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.. இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலை உலகின் பெரும்பகுதி ஆதரித்த நிலையில், அதன்பிறகு காசா மீது இஸ்ரேலின் கண்மூடித் தனமான குண்டுவெடிப்பு தாக்குதல்களால் அந்த ஆதரவை இழக்கத் துவங்கியுள்ளதாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். அப்பாவி பாலஸ்தீனியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த அவர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இந்த வாரம் இஸ்ரேலுக்கு சென்று போர் அமைச்சரவையுடன் ஆலோசனை நடத்துவார் எனவும் குறிப்பிட்டார்.. இருநாடுகளுக்கான தீர்வே போருக்குத் தேவை என்பதை அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், இஸ்ரேலுக்கு வழங்கும் ஆதரவுக்கு எதிராக அமெரிக்கர்கள் பலர் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்.. இந்நிலையில், நெதன்யாகு தனக்கு நல்ல நண்பர் என்றாலும், அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என பைடன் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்