2ஆம் உலகப் போரை தொடங்கிய ஹிட்லர்...உலக வரலாறின் போக்கை மாற்றியமைத்தவர்

x

முதலாம் உலகப் போரில் ஜெர்மனி தோற்றதற்கு யூதர்களின் சதி தான் காரணம் என்று ஹிட்லர் தலைமையிலான நாசி கட்சி தொடர் பிரச்சாரம் செய்து, பெரும் வளர்ச்சியடைந்தது.1933ல் ஜெர்மனியின் பிரதமராக பதவியேற்ற அடால்ப் ஹிட்லர், படிப்படியாக தனது அதிகாரத்தை விரிவுபடுத்த, பல்வேறு தந்திரங்களையும், அதிரடி நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார். ஜெர்மனியின் அதிபராக இருந்த முன்னாள் ராணுவ தளபதிஹின்டன்பர்க், 1934ல் மரணமடைந்த பின், ஜெர்மன் அதிபர் பதவியை ரத்து செய்து விட்டு, அதிபரின் அதிகாரங்களையும் ஹிட்லர் எடுத்துக் கொண்டார். பிரதமர் மற்றும் அதிபரின் அதிகாரங்களை ஒன்றினைத்து, தேசியத் தலைவர் என்ற புதிய பதவியை உருவாக்கி, ஜெர்மனியின் சர்வாதிகாரியானார் ஹிட்லர்.

அடிப்படை உரிமைகளை ரத்து செய்துவிட்டு, தம்மை எதிர்த்தவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்தார். ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் தடை செய்தார். ஜெர்மன் ராணுவ பலத்தை பல மடங்கு அதிகரித்து, மொத்த ஐரோப்பாவையும் கைபற்ற துடித்தார். யூத இன மக்கள்அனைவரையும் வதை முகாம்களில் சிறைபடுத்த தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக, ஆஸ்த்ரியா, செக்கோஸ்லோவோகிய நாடுகளை மிரட்டி, கையகப்படுத்தி, ஜெர்மனியுடன் இணைத்தார். போலந்து மீது 1939ல் படையெடுத்த பின், இரண்டாம் உலகப் போர் உருவாகி, பேரழிவு ஏற்பட்டது. யூத இன அழிப்பை முன்னெடுத்த அடால்ப் ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக பதவியெற்ற தினம், 1934 ஆகஸ்ட் 2.


Next Story

மேலும் செய்திகள்