இஸ்ரேல் அதிபருக்கு வந்த முக்கிய "call".. ரகசியமாக பேசிய இன்னொரு அதிபர் -"போர் பூமிக்குள் 3வது நாடு?"

x

காசாவில் இருந்து மக்கள் எகிப்து செல்ல பாதுகாப்பு வழித்தடங்களை அமைக்க இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கிடம், பிரேசில் அதிபர் லூலா கோரிக்கை விடுத்துள்ளார். ஐசக்குடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், பாலஸ்தீனியர்கள் பாதுகாப்பாக எகிப்து செல்ல வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தண்ணீர், மின்சாரம், மருந்துகள் ஆகியவற்றிற்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐநா பாதுகாப்பு கவின்சிலில் தற்போது தலைமை வகிக்கும் பிரேசில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க இன்று பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்