காண்போரை அலறவிடும் உலக சாதனை - 291 மீட்டர் தூரம் - உறையவைக்கும் வீடியோ

x

ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற ஸ்கை ஜம்ப் போட்டியில், ஜப்பானிய ஒலிம்பிக் சாம்பியன் ரியோயு கோபயாஷி உலக சாதனை படைத்துள்ளார். ஐஸ்லாந்தின் அகுரேரி பகுதியில் நேற்று நடைபெற்ற ஸ்கை ஜம்ப் போட்டியில் அவர், 291 மீட்டர் ஸ்கை ஜம்ப் செய்து, உலக சாதனை படைத்தார். 27 வயதான ரியோயு கோபயாஷி 32 தனிநபர் வெற்றிகள் மற்றும் இரண்டு ஒட்டுமொத்த உலகக் கோப்பை பட்டங்களையும், 2022 ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளதுடன், தற்போது ஸ்கை ஜம்ப் போட்டியில் உலக சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்