தைவானை புரட்டி போட்ட நிலநடுக்கம்... குலுங்கிய சீனா, ஜப்பான்... சுனாமி எச்சரிக்கை

x

தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.

Vovt

தைவானின் தலைநகர் தைபேயில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது... ஹுவாலியன் நகரத்திலிருந்து 18 கிலோமீட்டர் தெற்கே 34.8 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 700க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் ரயில் மற்றும் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. ஷாங்காய் மற்றும் சீனாவின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள பல மாகாணங்களிலும், தெற்கு ஜப்பானிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜப்பானின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒகினாவா, மியாகோ மற்றும் யாயாமா தீவுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

பிலிப்பைன்ஸ் அதிகாரிகளும் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர். மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்