இலங்கையில் திடீரென அதிகரித்த பெட்ரோல் டீசல் விலை

x

இலங்கையில் வாட் வரியை 15 விகிதத்தில் இருந்து 18 விகிதமாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக இன்று முதல் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான வரி 3 விகிதம் அதிகரிக்கப்படும் என தொலைபேசி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல் எரிபொருள் விலையிலும் மாற்றம் அமலுக்கு வந்துள்ளது... ஆக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 20 ரூபாய் அதிகரித்து 366 இலங்கை ரூபாய்க்கும், ஆக்டேன் 95 ரக பெட்ரோல் விலை 38 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 464 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது... அதேபோல் ஓட்டோ டீசல் 29 ரூபாய் விலை அதிகரித்து 358 ரூபாய்க்கும், சுப்பர் டீசல் ஒரு லிட்டர் 41 ரூபாய் அதிகரித்து 475 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது... அத்துடன் மண்ணெண்ணெய் ஒரு லிட்டர் 11 ரூபாய் குறைக்கப்பட்டு 236 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது... எரிபொருள் விலையை சிபேட்கோ நிறுவனம் அதிகரித்துள்ள நிலையில், லங்கா ஐ.ஓ.சி. மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் அதிகரித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்