சகோதரி தினம் கொண்டாடுவது எப்படி...?
உசுரே நீதனே நீதானே... நிழல உன்கூட நானே....என்னடா திடீர்னு இந்த பாட்ட பாடுறனேனு பாக்குறீங்களா... அதாவது இன்னைக்கு சிஸ்டர்ஸ் டேயாம்... அதான் அக்கா தங்கச்சிக்கு ஏத்த மாதிரி லேட்டஸ்ட் பாட்ட ஒன்னு பாடுனேன்... பட்... நம்ம அக்கா , தங்கச்சிகளை கொண்டாட இது மட்டும் பத்தாதுங்க... இந்த டேவ வேற எப்டிலாம் செலப்ரேட் பன்னலாங்குறதையும்... இந்த டேய்ல இருக்க சுவராஸ்யங்களையும் தெரிஞ்சுக்கலாம் அட டே பகுதி மூலமா...
அட டேல இன்னைக்கு நாம எதை பத்தி பாக்கபோறோம்னா.... நம்ம வீட்டுல தொட்டதுக்கெல்லாம் குத்தம் கண்டுபிடிச்சி... டாம் அன் ஜெரி மாதிரி... நம்ம கூட எப்ப பாரு சண்டைபோடுறது யாருன்னு கேட்டா.... நம்ம எல்லாரோட மைன்டுக்கும் முதல்ல நியாபகம் வர்ரது அக்கா தங்கச்சி தான்... முக்கியமா சிசிடிவி கேமரா மாதிரி நம்மலை நோட் பண்ணி அம்மாகிட்ட போட்டுக்கொடுக்குறதும் அவங்கதான்... சில நேரத்துல நம்மகூட சேர்ந்து பூஸ்ட் திருடி திங்குறது... காசு திருடுறதுனு இவங்க பன்ன திருட்டு சம்பவங்களை வச்சு வித விதமா மனி ஹைஸ்ட் சீரிஸே எடுக்கலாம்...
அப்டி பல பெருமைகள கட்டி ஆளுற நம்ம சகோதரிகள பாராட்டி சீராட்டி... ஒரு டேய் கொண்டாடலைன்னா எப்படி...!
