ஆபாசமா மாறும் செல்பி புகைப்படங்கள்.. "APPல் கடன் வாங்கினால் ஆப்பு" - பின்னனியில் சீனாவா? எச்சரிக்கை

x

சீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த கடன் வழங்கும் செயலி ஒன்றின் இந்தியாவுக்கான தலைவராக நியமிக்கப்பட்ட தமிழரை, கோடிக்கணக்கில் பணமோசடி செய்த வழக்கில் ஒடிசா போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள ஆவியூரை சேர்ந்தவர் சித்ரவேல். இவர், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பெங்களூரு வந்த இருவருடன் சித்ரவேலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த இருவரும், மக்கள் பணத்தை மோசடி செய்ய கடன் வழங்கும் செயலி ஒன்றை உருவாக்கிய நிலையில், அதில் இந்தியாவுக்கான தலைவராக சித்ரவேலை நியமித்தனர். தொடர்ந்து, தனக்கு கீழே சிலரை வேலைக்கு சேர்த்துக் கொண்ட சித்ரவேல், பல கவர்ச்சி திட்டங்களை விளம்பரப்படுத்தி, மக்களை வலையில் விழ வைத்துள்ளார். தொடர்ந்து வாடிக்கையாளர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மோசடியில் ஈடுபட்டு வந்த சித்ரவேல், இதன்மூலம் சீனர்களுக்கு கோடிக்கணக்கிலான பணத்தை பரிவர்த்தனை செய்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பணத்தை சுருட்டிக் கொண்டு சீனர்கள் இருவரும் தப்பிச் சென்ற நிலையில், இதனால் பாதிக்கப்பட்ட ஒடிசாவை சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், தமிழகம் வந்த ஒடிசா போலீசார்


Next Story

மேலும் செய்திகள்