2 வருடத்தையும் தாண்டி நடக்கும் போர் - புதினுக்கு ஐடியா கொடுத்த பிரதமர்

x

ரஷ்யா-உக்ரைன் பிரச்சினையில் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார். அண்மையில் நடைபெற்ற ரஷ்ய அதிபர் தேர்தலில் அதிபர் புதின் ஐந்தாவது முறையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், ரஷ்யா- உக்ரைன் பிரச்சனையில் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர உறவு ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை புதினிடம் பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்