அணு ஆயுத போர் தொடுக்குமா ரஷ்யா? - உலகை அதிரவிட்ட புதின் பதில்

x

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் சர்வதேச செய்தி நிறுவனங்களுக்கு புதின் பேட்டியளித்தார். அப்போது, உக்ரைன் மீதான அணு ஆயுதப் போர் அபாயங்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ​​​​ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்தும் என மேற்கத்திய நாடுகள் பலமுறை குற்றம் சாட்டியதாகவும், ஆனால் அது தவறு என்றும் தெரிவித்தார். மேலும் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தியது அமெரிக்கா தான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பல்வேறு அச்சுறுத்தல்கள் இருக்கும் நிலையில், இத்தகைய ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அணுசக்தி கோட்பாடு அனுமதி அளிப்பதாகவும், நேட்டோ உறுப்பு நாடுகளைத் தாக்கும் திட்டம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும் புதின் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்