"தேர்தல் தள்ளி வைப்பு"...வன்முறையாய் வெடித்த போராட்டம் - வீசப்பட்ட புகை குண்டுகள் - பரபரப்பு காட்சி

x

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் அதிபர் தேர்தலை பிப்ரவரி 25ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக, கடந்த சனிக்கிழமை அதிபர் மேக்கி சால் அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டாக்கரில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், சாலைகளில் டயர்களை தீயிட்டு எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டம் வன்முறையாக மாறியதால், காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர். இதனிடையே, போராட்டங்கள் குறித்து சிறப்பு செய்திகள் நேரலைகள் ஒலிபரப்ப‌க்கூடாது என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன. அதே நேரத்தில், வன்முறையை தூண்டியதாக சில ஊடகங்களின் செயல்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்