உண்மையை உடைத்த அதிபர்...கொஞ்சமும் கண்டுகொள்ளாத தலைவர்கள்

x

உண்மையை உடைத்த அதிபர்...கொஞ்சமும் கண்டுகொள்ளாத தலைவர்கள்

விமான விபத்தில் உயிரிழந்த ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் (Yevgeny Prigozhin) மற்றும் அவரது துணை தலைவர் டிமிட்ரி உட்கின் ஆகியோரை ஏற்கனவே தான் எச்சரித்ததாக பெலாரஸ் அதிபர் தகவல் தெரிவித்துள்ளார்...

இருவரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதால் அவர்களை பெலாரசிலேயே இருக்குமாறு வலியுறுத்தியதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்... தனக்கு எதிராகக் கடந்த ஜூன் மாதம் கலகம் செய்ய முயன்றதற்காக வாக்னர் குழுவை கடுமையாக எச்சரித்திருந்தார் ரஷ்ய அதிபர் புதின்... ஆனால் சில மணி நேரங்களிலேயே பிரிகோஜின் மற்றும் அவரது சில போராளிகள் பெலாரஸ் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மாஸ்கோவை நோக்கி அணிவகுத்து சென்றால் இறக்க நேரிடும் என தான் எச்சரித்ததாகவும், அதற்கும் தான் தயார் என்ற தொனியில் பிரிகோஜின் பதிலளித்ததாகவும் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்... தொடர்ந்து பிரிகோஜின் மற்றும் டிமிட்ரி உட்கின் ஆகிய இருவரையும் எச்சரித்து வந்ததாக அலெக்சாண்டர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இவ்விபத்திற்கும் புதினுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்