பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி.. இக்கட்டான நிலையில் குகேஷ்.. உலகக்கோப்பையில் சோதனை மேல் சோதனை

x

அசர்பைஜான் நாட்டில் நடைபெற்றுவரும் ஃபிடே செஸ் உலகக்கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டத்தின் முதல் சுற்றில் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனிடம் இந்திய வீரர் குகேஷ் தோல்வி அடைந்தார். இன்று நடைபெறும் 2ம் சுற்றில் குகேஷ் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினால் மட்டுமே குகேஷால் போட்டியில் நீடிக்க முடியும். அதே சமயம், சமன் செய்தாலே கார்ல்சன் அரையிறுதிக்கு தகுதிபெற முடியும். இதனிடையே, மற்றொரு காலிறுதி ஆட்டத்தின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா, சக இந்திய வீரர் அர்ஜுன் எரிகேசியிடம் தோல்வியைத் தழுவினார்.


Next Story

மேலும் செய்திகள்