`இந்திய பெருங்கடலில் முக்கிய பிரச்சினைகள்..5 வருடத்திற்குள் இதை செய்ய வேண்டும்'

x

இந்தியப் பெருங்கடலில் உள்ள முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்க விரிவான திட்டம் அவசியம் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்...

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற 7வது இந்து சமுத்திர மாநாட்டில் ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். பாதுகாப்பான மற்றும் வளமான இந்து சமுத்திரத்திற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், அங்கு கப்பல் போக்குவரத்துச் சுதந்திரம் குறித்து மீண்டும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்... இந்து சமுத்திரத்தின் ஸ்திரத்தன்மைக்காக, 5 வருடங்களுக்குள் சுதந்திர பாலஸ்தீன அரசை நிறுவி, இஸ்ரேல் அரசன் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கை மூலம் காசா பகுதியில் போர் மோதல்களை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவது அவசியம் என்றும் ரணில் எடுத்துரைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்