கண்டம் விட்டு கண்டம் சென்று ரஷ்யர்கள் நாவில் எச்சில் ஊறவைத்த "மோடி" இட்லி..

x

தலைநகர் சென்னையில் உள்ள ஆர் கே நகர் பகுதியை சேர்ந்த இனியவன், இட்லி தயார் செய்து விற்பனை செய்வதை தொழிலாக கொண்டவர்... இட்லியில் ஏதாவது புதுமை புகுத்த வேண்டும் என்று ஒரு யுக்தியை கையாண்டார். "வீட்டில் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, பிடித்த உருவத்தினால் ஆன தோசை, இட்லிகளை செய்து கொடுத்தால் சாப்பிட்டு கொள்ளும். இதை தன் இட்லி தயாரிப்பில் பயன்படுத்தி, சாக்லேட் இட்லி, பீட்ரூட் இட்லி, இளநீர் என 2547 வகையிலான இட்லிகளை தயார் செய்து விற்பனை செய்யத் துவங்கினார்.

தற்போது விதவிதமான இந்த இட்லிகளுக்கு மவுசு கூடிவிட்டது. பல முக்கியஸ்தர்களின் திருமணங்கள், வெளியூர் விழாக்களில் ஆர்டர்கள் குவிந்து வருகின்றது. இவரது, மனக்கும் இட்லிகள் தற்போது லிம்கா புத்தகத்தில் இடம்பெற்று, சாதனை மனிதர் பட்டியலில் இருக்கிறார் இட்லி இனியவன், மேலும், 100 கிலோ மதிப்பில் மோடி இட்லி, அப்துல் கலாம் இட்லி, காமராஜர் இட்லி என தன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றார்.

இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக ஐநா சபை அறிவித்த நிலையில், அனைத்து சிறுதானிய வகைகளிலும் இட்லி தயாரித்து அசத்தி வருகின்றார். இதை அறிந்த ரஷ்யா வாழ் இந்தியர்கள் இட்லி இனியவனை அங்கே அழைத்து, கௌரப்படுத்தியுள்ளனர். இதற்கு பதிலாக 500 வகை இட்லிகளை தயார் செய்து, ரஷ்ய மக்களின் நாவை எச்சில் ஊற வைத்துவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்