ஊர் சுற்றி பார்க்க செம ஸ்பாட்... பொழுதுபோக்கில் சிகரம் தொடும் Wales...
இந்த வாரம் ஊர் விட்டு டூர் வந்து பகுதில... நாம சுத்தி பாக்க போற இடம்... எழில் கொஞ்சும் அழகோடு சேர்த்து என்டர்டெயின்மெட்டையும் அள்ளி குடுக்குற... wales நாட்டுக்கு தான்...
லண்டன்க்கு பக்கத்துல இருக்க இந்த நாடு ஆரம்பத்துல பெருசா அரியப்படாத நாடாதான் இருந்துச்சு... 1905-க்கு அப்புறம் இங்க நிறஇய நிலக்கரி சுரங்கம் ஆரம்பிச்சதும்… மிகப்பெரிய நாடா உருவாகி உலக நாடுகள திரும்பி பாக்க வைக்குற அளவுக்கு வளந்துடுச்சு….
சரி ஊர் பெருமையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்... எப்போ எங்களுக்கு ஊர சுத்தி காட்ட போறீங்கனு நீங்க யோசிக்கிறது எனக்கு புரியுது அதுனால.. சட்டு புட்டு ஊருக்குள்ள இறங்கி அலப்பறை குடுக்க ஆரம்ப்பிக்கலாம் வாங்க...
wales நாட்டுக்குள்ள நுளைஞ்சதும் கம்பீர தோற்றத்துல நம்மள வரவேற்குது CARDIFF கோட்டை...
கிட்ட தட்ட 2000 வருசத்துக்கு முன்னாடி ரோமானியர்களால் உருவானது தன இந்த கம்பீர கோட்டை... இந்த கோட்டைக்குனு ஒரு விஷேஷ சக்தி இருக்குங்க... அதாவது இந்தகோட்டை குள்ள நுளையும் போது 2 ஆயிரம் வருஷம் டைம் ட்ராவல் பண்ண மாதிரி ஒரு பீல் குடுக்குமாம்... என்னாங்க ஓப்பனிங்கே உருட்டா இருக்கேனு நினைக்காதீங்க... அதாவது இங்க வரைஞ்சு வச்சுருக்க வரலாற்று ஓவியங்கள் அந்த காலகட்டதுக்கே உங்களை கூட்டிடு போயிடும்னு சிம்ப்பாலிக்கா சொல்றேன்...
கோட்டை தரிசனம் முடிச்சு அடுத்து நாம போகப்போற இடம் principality stadium...
இந்த ஸ்டேடியத்தை பத்தி கதை கதையா சொல்றதுக்கு நிறைய இருக்கு... ஆனா இதோட அருமை பெருமையை எல்லாம் பேச ஆரம்பிச்சா இந்த ஒரு செக்மென்ட் பத்தாது... அதனால ஷாட்டா சொல்லிடுறேன்.
இது தான் உலகத்துலையே மிகப்பெரிய rugby football game stadium.... எந்த அளவுக்கு பெருசா இருக்கும்னா…. ஒரே நேரத்துல கிட்டதட்ட எழுபத்தைந்தாயிரம் பேர் உட்கார்ந்து மேட்ச் பார்க்குற அளவுக்கு பெருசாம்... சும்மா சொல்லலங்க டவுட்டா இருந்தா எண்ணி பாத்துக்கோங்க!
ஈசிஆர்ல இருக்கிற முட்டுகாடுல, இல்லனா ஊட்டி கொடைக்கானல் மாதிரி... டூர் போன இடத்தில.. லைப் ஜாக்கெட்ட மாட்டிகிட்டு... போட்ல அப்படி ஒரு சுத்து... இப்படி ஒரு சுத்துனு... சுத்தி வந்துட்டு... ஐயா நான் போட்டிங் போயிட்டு வந்துட்டேன்னு, நம்மல்ல பல பேரு பெருமை பீத்திப்போம்... பட் போட்டிங்னா இது தான்யா போட்டிங்னு சொல்லுற மாதிரி International white water center-ல த்ரில்லிங்கான அனுபவத்த குடுக்குறாங்க...
என்ன பயமா இருக்கா... இனிமே இன்னும் பயங்கரமா இருக்கும்!
சரி... வந்ததும் வந்துட்டோம்... adventure அனுபவத்தோட அடுத்து Barry island pleasure park-ல இருக்க எல்லாத்திலயும் ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாம் வாங்க...
வெளிநாட்டுக்கு வந்துட்டு, ஃபாரின் சாக்லேட் வாங்காம போன எப்படி...? அதுனால ஷாப்பிங் பண்றதுகாகவே Royal arcade-ங்குற இடத்தை நமக்காகவே ஒதுக்கி வச்சிருக்காங்க... அடேங்கப்பா கண்ணுக்கு எட்டுனா தூரம் வரை... சின்ன சின்ன கடைகளும் ஓட்டலும் வரிசை கட்டி இருக்கும் போல… ஊர் சுற்றி பார்க்க வர சுற்றுலா வாசிகள்ல பாதி பேர், முதல்ல இங்க தான் படையெடுப்பாங்க போல,,.
வீடு விட்டா ஆபீஸ்... ஆபீஸ்விட்டா வீடுனு, ஒரு வட்டதுக்குள்ளேயே வாழுறோமே "ரொம்ப சலிப்பா இருக்கு நண்பா"னு பீல் பண்றவங்களுக்காகவே இந்த ஊர்ல ஒரு இடம் இருக்குனா அதுதான் CARDIFF BAY !
அட பீச்சு தானேனு இந்த இடத்த சாதாரணமா நினைச்சிடாதீங்க.... ஜில்லுனு கடல் காத்து... கலர்கலரான மக்கள்னு மனசே ஒரு மாதிரி லேசாயிடும்... இது கூடவே படகு, கப்பல் சவாரினு ஏகப்பட்ட என்டர்டெயின்மென்ட் நமக்காக வெயிட் பன்னிட்டு இருக்கு... குறிப்பா தனிமை விரும்பிகள்.... WETLAND-ல பாலத்துல நடந்து ரகுமான் பாட்ட கேட்டா போதும்... அய்யோ சொர்கத்துல மிதக்குற மாதிரியே இருக்கும்!
ரொம்ப நேரம் வேல்ஸ் நாட்ட சுத்தி பார்த்துட்டோம்... அதுனால கையில கொஞ்சம் எனர்ஜி drink , popcorn லாம் எடுத்துட்டு ரெடியா இருங்க... ஏன்னா இப்போ நாம வேல்ஸ் நாட்டோட சுவாரஸ்ய தகவல்களை பார்க்கபோறோம்...
நம்ம ஊர்லலாம் ஒரு பொண்ணுக்கு propose பண்ணனும்ன்னா லெட்டர், rose குடுத்து தான் propose பண்ணுவாங்க... இதை தான் நாமலும் காலாகாலமா படத்துல பாத்துகிட்டு இருக்கோம். அதையே தான் நாமளும் ஃபாலோ பன்றோம். ஆனா இந்த ஊர்ல, அந்த புரசீஜர்லாம் ஒர்க் அவுட் ஆகாது.
ஏனா இங்க காதலர்கள் தன்னோட காதலை ஒரு SPOON கொடுத்து வெளிப்படுத்துவாங்களாம்... மரகட்டையால் ஆன அந்த ஸ்பூனுக்கு LOVE SPOON-னு பேராம்... ஹாட்டின், அம்புனு பல காதல் சின்னங்களை அந்த ஸ்பூன்ல செதுக்கி, காதலிக்குறவங்க கிட்ட கொடுப்பாங்கலாம்... அதை அவங்க வாங்கிட்டா லவ் சக்சஸ்... இல்லனா நீங்க, உங்க ஸ்பூனை தூக்கிட்டு அடுத்த ஆள பாக்க போயிடுனும்...
அடுத்து நாம போகப்போற இடம் இதோ இந்த போர்டுல இருக்க ஊருக்கு தான்.... அட என்னப்பா... ஊர் பேரே ஒரு ஊர் அளவுக்கு நீளமா இருக்குனு தலை சுற்றி விழுந்துறாந்தீங்கா... இந்த நகரத்துக்கு பக்கத்துல இருக்க ஒரு கிராமத்தோட பேர தான் நீங்க இப்போ பார்த்துட்டு இருக்குறீங்க...
இது தான் உலகத்துலையே இரண்டாவது நீளமான பெயர்கொண்ட கிராமமாம்... வேல்ஸ் மக்கள் ஈசியா இவ்வளவு நீளமான பெயரை வச்சுட்டாங்க... இந்த ஊர் பேர் என்னனு சொல்லலாம்னு பாத்தேன்…. ஆனா இந்த ஊர் பேரை சொல்லி முடிக்குறதுக்குள்ள இந்த ஊருக்கே போய்டலாம் போல...
CARDIFF நகரத்துல எல்லா இடங்கள்ளையும் அசால்டாக சுத்தி வர்ர மக்கள் DEATH JUNCTION அப்டிங்குற இந்த ரோடு வழியாக போகும் போது மட்டும் உசுர கைல பிடிச்சிகிட்டு போவாங்கலாம்... ஏன்னா... ஒருகாலத்தில இந்த நகரத்திலிருந்து பயங்கரமான குற்றவாளிகளையெல்லாம் தூக்குல போட்டு இந்த இடத்துலதான் புதைச்சுருக்காங்க... அவங்கலாம் இப்போ வரைக்கு பேயா சுத்திகிட்டு இருக்கிறதா... ஊருக்குள்ள அந்த பயம் இன்னும் உசுரோட உலா வந்துகிட்டு இருக்கு. கேட்க கொஞ்ச பயமா இருந்தாலும் அதுதான் உண்மையாம்...!
வேல்ஸ் நாட்டோட சுவாரஸ்ய தகவல்களை பார்த்த நாம, அடுத்து இங்க கொண்டாடுற வினோத திருவிழாக்கள்ள மக்களோட மக்களா கலந்துகிட்டு நாமலும் ஒரு ஆட்டத்தபோட்டு fun பண்ணலாம் வாங்க...
கிணத்துல நீச்சலடிச்சிருப்பீங்க... ஆத்துல நீச்சலடிச்சிருப்பீங்க... ஏரி குளம் கம்மானு எங்கெங்கையோ நீச்சலடிச்சுருப்பீங்க... ஆனா வெறித்தனமா சேத்து தண்ணியில நீச்சலடிச்சிருக்கீங்களா? அண்ணன் இப்போ அதை தான் செஞ்சிகிட்டு இருக்காரு.
world Bog Snorkeling championship-ங்குற இந்த வினோத திருவிழால. சேத்து தண்ணியில படுத்து உருண்டு நீச்சலடிக்கிறது தான் இந்த திருவிழா ஸ்பெஷலே... உங்கள்ல யாருக்காச்சும் ஆசை இருந்தா ட்ரை பண்ணி பாருங்க...
தலையில குதிரையோட மண்டையோடு... வெள்ளை நிற போர்வைனு ஊருக்குள்ள எல்லாரும் வினோதமா வேஷம்போட்டு பேய் மாதிரி வலம் வர்ரத பார்த்து பயந்துறாதீங்கப்பா... இந்த வேஷம் எதுக்குன்னா நாம இப்போ பாரம்பரியமா கொண்டாடப்படுற Mari lwyd festivalல தான் இருக்கோம்...
அதாவது ஒவ்வொரு வருஷமும் கிறிஸ்துமஸ் வர்றதுக்கு முன்னாடி கொண்டாடப்படுற இந்த திருவிழாவோட FUN part என்னன்னா... ஊருக்குள்ள இருக்கும் ஒவ்வொரு வீட்டிக்கும் போய் பயமுறுத்தி காசு கேட்பாங்களாம்... அதுலையும் வயசு பெண்கள் யாராவது வீட்டுல இருந்தாங்கன்னா அவங்களை பயமுறுத்தியே தலைதெறிக்க ஓட விட்ருவாங்களாம்...
நம்ம எல்லாருமே old is gold-ங்குற வாக்கியத்தை சின்ன வயசுலய கேட்ருப்போம்... அதோட முழு அர்த்தம் என்னனு அப்போ நம்மளுக்கு புரிஞ்சிருக்காது... ஆனா அந்த வாக்கியத்தை வெரும் வாய் வார்த்தையா இல்லாம வேல்ஸ் மக்கள் Llandudno Transport festival-ங்குற திருவிழாவை கொண்டாடி பழைய பொருட்களுக்கு பெருமை சேக்குறாங்க...
நம்ம வீட்டுல இறந்த முன்னோர்களை வழிபடனும்ன்னா அவங்களுக்கு பிடிச்சதையெல்லாம் சமைச்சு வச்சு ஒரு பெரிய படையலே போட்டு வழிபடுவோம்... இதையே தங்களோட ஸ்டைல்ல the festival of the dead அப்படிங்கிற திருவிழாவா கொண்டாடுறாங்க... சங்கர் படத்தையே மிஞ்சுற அளவுக்கு பிரம்மாண்ட செட்டு போட்டு வேற லெவல்ல வேசம் கட்டி... இறந்து போன தங்களோட முன்னோர்களை வழிபடுறாங்க... அட இதுல என்ன ஹைலைட்னா... நாம நினைக்குற மாதிரி பூஜை பண்ணிலாம் இவங்க வழிபடுறது இல்ல... டிஜே , பாட்டு, ஆட்டம்னு பார்ட்டி மோட்ல வழிபடுறாங்க...
சுற்றுல்லா தளங்கள், சுவாரஸ்ய விழாக்கள்னு வேல்ஸ் நாட்ட ஒரு அலசு அலசியாச்சு... அடுத்தென்ன கமகமன்னு மூக்கை துளைக்கும் காரசார உணவுகளை ஒரு புடி புடிக்கலாம் வாங்க...
நாமெல்லாம் வீட்டுல bread இருந்தா அதுல ஜாம் தடவுனோமா ஒரு கடிச்சோமான்னு morning breakfastஅ முடிச்சிருவோம்... ஆனா இந்த நகர மக்கள் உருகிய சீஸ்ல காரசார மசாலாக்களையெல்லாம் போட்டு... வருத்தெடுத்த bread மேல ஊற்றி welsh rarebit toast-னு அமர்க்கலமான ரெசிபியோடதான் காலை வேலையே தொடங்குராங்க...
டிராவல்ல எடுக்குற அவசர பசியை சமாளிக்க சமோசா வடிவத்துல இருக்கும் OGGIEய ஒன்னு வாங்கி சாப்பிட்டாலே போதுமாம்... வயிறு நிரஞ்சிரும்னு சொல்றாங்கப்பா...
ஊருல ஆட்டுக்கால் பாயா கோழிக்கால் சூப்னு அசைவ உணவை வெட்டு வெட்டுனு வெட்டுனவங்க... கோழிக்கால் சூப் கிடைக்கலயேனு FEEL பன்னாம இருக்க நம்ம ஊர் ஸ்டைல்லயே தயாராகுது CAWL SOUP...
காரசாரமான விருந்து உணவுகளை சாப்பிட்ட நாம கடைசியா ஒரு கப் டீயோட ஒரு பீஸ் BARABITH CAKE சாப்பிட்டாதான் டூருக்கு வந்த திருப்தியே வருமாம்...
சமையல் முதற்கொண்டு சகல விஷயங்களிலும் அள்ள அள்ள ஆச்சரியம், திகட்ட திகட்ட வித்தியாசம் குடுக்குதுனா அதற்கு பெயர்தான் Wales...
