உலகையே உலுக்கிய இஸ்ரேல் போர்... தற்போது வெளியான பேரதிர்ச்சி புள்ளி விவரம்

x

#israelpalestineconflict | #gaza | #is

உலகையே உலுக்கிய இஸ்ரேல் போர்... தற்போது வெளியான பேரதிர்ச்சி புள்ளி விவரம்

வடக்கு காசாவில் பல மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பேக்கரியில் ரொட்டிகளுக்காக பாலஸ்தீனியர்கள் நீண்ட வரிசைகளில் நெடு நேரம் காத்துக் கிடந்தனர்.

இஸ்ரேல் காசா போர் துவங்கியது முதல் மாவு மற்றும் எரிபொருள் பற்றாகுறையால் பேக்கரிகள் இழுத்து மூடப்பட்டன... பல மாதங்களுக்குப் பிறகு காசா நகரில் உள்ள பேக்கரி ஒன்று திறக்கப்பட்டது. அங்கு ரொட்டிக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர். பெரும்பாலான இஸ்ரேல் துருப்புகள் ஏறக்குறைய 10 லட்சம் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் ரஃபா நகரின் மீதான தாக்குதலுக்காக அப்பகுதிக்கு சென்றுள்ளனர்... போரால் பேரழிவிற்குள்ளான பாலஸ்தீனிய பகுதி பஞ்சம் மற்றும் நோய்த் தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளது... கிட்டத்தட்ட அங்குள்ள அனைத்து மக்களும் தற்போது வீடற்றவர்களாகி உள்ளனர்... இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் இதுவரை 33 ஆயிரத்து 729 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்... மேலும் 76 ஆயிரத்து 371 பேர் படுகாயம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்