இஸ்ரேலின் கண்மூடித்தன தாக்குதல்.. இந்தியாவுக்கு வந்த அதிர்ச்சி சேதி

x

இஸ்ரேல் - காசா போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், காசாவின் ரஃபா நகரில் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி இஸ்ரேலிய டேங்க் தாக்கியதில் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது...இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற கர்னல் வைபவ் அனில் காலே, ஐநா பாதுகாப்புத் துறையில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வந்தார்... வைபவ் உள்ளிட்ட 2 பேருடன் சென்ற ஐநா வாகனத்தின் மீது ரஃபாவில் டேங்க்குகள் தாக்குதல் நடத்தியதில் வைபவ் கொல்லப்பட்டார். மேலும் இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தாக்குதல் நடந்த இடத்தில் இஸ்ரேலிய டேங்க்குகள் மட்டுமே இருந்த நிலையில், அதிகாரி வைபவ் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்